தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்தது என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
உங்களுக்கு Rule 72 தெரியுமா?
வங்கியில் வேலை பார்க்கிறவர்களுக்கு RULE 72 பற்றி தெரிந்திருக்கும்.
அதாவது விலைவாசி ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 12% உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அப்படி உயர்ந்துகொண்டே இருக்கும்பட்சத்தில் ஒரு பொருளுடைய விலை RULE 72 பிரகாரம் 6 வருடங்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகிறது.
சரி, நீங்கள் வங்கியில் உங்கள் பணத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் உங்களுக்கு கொடுக்கும் வட்டி வருடத்திற்கு வெறும் 6% மட்டுமே. LIC மற்றும் அஞ்சல் துறையும் 6% தான் வட்டியாகக் கொடுக்கிறார்கள். ஆனால் விலைவாசி உயர்வோ வருடத்திற்கு 12% உயர்ந்துகொண்டேதான் போய்க்கொண்டிருக்கிறது. இதை யாராலும் தடுக்கமுடியாது.
அப்படியென்றால், தங்கத்தில் முதலீடு செய்து விலைவாசி உயர்வை மேற்கொள்ளலாம் என்றால் அதுவும் சாத்தியமில்லை. கடந்த 30 வருடங்களாக தங்கத்தின் விலை உயர்வை கணக்கெடுத்துப் பார்த்தல் அதில் முதலீடு செய்பவர்கள் காண்கிற வளர்ச்சி விகிதம் வருடத்திற்கு 9% இலிருந்து 10% மட்டும்தான். ஆனால் விலைவாசி உயர்வோ வருடத்திற்கு 12%.
ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் வருடத்திற்கு 24% ம் மேலே கூட வளர்ச்சி விகிதம் கிடைக்கும். ஆனால், பெரிய வளர்ச்சியிலிருந்து அதல பாதாளத்திற்கு எப்பொழுது தள்ளப்படுவோம் என்பது யாராலும் முன்கூட்டி சொல்லமுடியாது. நடுத்தர வகுப்பினர் ஷேர் மார்க்கெட்டை நம்பி முதலீடு செய்யமுடியாது.
வங்கிசாரா நிறுவனங்கள் மற்றும் ஏலசீட்டு இவைகளில் முதலீடு செய்தால் 12% மேல் வளர்ச்சி விகிதம் கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அதே சமயம், இந்த மாதிரியான வங்கிசாரா நிறுவனங்களும், ஏலசீட்டு கம்பெனிகளும் மக்கள் பணத்தை சுருட்டிக்கொண்டு திடீரென்று இரவோடு இரவாக காணாமல் போய்விடுகின்றன.
ஏற்கனவே நல்ல தொழில் செய்து நிறைய லாபம் செய்கிறவர்களுடன் கூட்டாக சேர்ந்து தொழில் தொடங்கலாம். ஆனால் நமக்கு நல்ல உண்மையுள்ள தொழில் கூட்டாளி அதாவது பார்ட்னர்ஸ் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.
எனக்குத் தெரிந்தவரையில், நிலத்தில் முதலீடு செய்கிறார்கள்தான் 10 அல்லது 20 வருடங்களில் பெரும் செல்வந்தர்கள் ஆகிவிடுகிறார்கள். நல்ல வளர்ந்து கொண்டிருக்கிற இடத்தில் நிலம் குறைவான விலையில் கிடைக்கும்போது வாங்கிப்போடவேண்டும். வில்லங்கம் இல்லாத நிலமாக இருக்கவேண்டும். நிலத்தை விற்கும் தனி நபர் அல்லது ஸ்தாபனம் நேர்மையுடன் செயல்படுகிறவர்களாக இருக்கவேண்டும்.
அப்படிப்பட்ட நேர்மையான ஸ்தாபனங்கள் எனக்குத் தெரிந்தவரையில் தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டுதான் இருக்கின்றன. இவர்கள் தமிழ்நாடு முழுவதும் நிலங்களை வெறும் பிளாட் போட்டு விற்பனை செய்யவில்லை. மாறாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறிய பெரிய நகரங்களின் வெளியே 5 முதல் 8 கிலோ மீட்டர் தொலைவில் துணை நகரங்களை உருவாக்கி வருகிறார்கள்.
அவர்கள் இப்படி உருவாக்கும் துணை நகரங்களிலேயே முதலாவதாக தங்களது சொந்த நிறுவனங்களை, உதாரணமாக அவர்களுடைய சொந்த பெட்ரோல் பங்க், உணவகம், ஹாஸ்பிடல், ஸ்கூல், காலேஜ் என்று நிறுவுகிறார்கள். இப்படி அவர்கள் ஒரு சில கோடிகள் பணத்தை அவர்கள் உருவாக்கும் ஒவ்வொரு துணை நகரங்களிலேயும் தங்கள் சொந்த தொழில்களைத் தொடங்குவதால், அவர்கள் காலா காலத்திற்கும் அவர்கள் உருவாகும் துணை நகரங்களிலேயே இருக்கிறார்கள்.
எனவே, இங்கே நிலம் வாங்கி வீடுகட்ட அநேகர் விருப்புகிறார்கள். அத்தியாவசியத் தேவைகள் யாவும் அந்தந்த துணை நகரங்களிலேயே கிடைக்கிறது. எனவே அங்கே நிலம் வாங்கி வீடு கட்டி குடியேறுகிறவர்கள் தங்களுடைய சகஜமான வாழ்க்கையை அங்கேயும் எந்தப் பிரச்சனையோ அல்லது சிரமமோ இல்லாமல் வாழமுடிகிறது.
ஒரு நகரத்திற்கு அருகிலேயே நிலம் வாங்கி வீடு கட்டினால் ஆகிற செலவில் பாதிதான் இந்தத் துணை நகரங்களில் வீடு கட்ட செலவாகிறது. எனவே தங்கள் கையில் இருக்கிற சொற்ப பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு, நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி கடன் வாங்காமலேயே வீடும் கட்டி நிம்மதியாக வாழ்கிறார்கள்.
இந்த நேர்மையான நிறுவனங்கள், தங்களிடம் நிலம் வாங்குபவர்களிடம் பாதிப் பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு நிலத்தை ரெஜிஸ்டர் செய்து கொடுக்கிறார்கள். மீதி பணத்தை மாதா மாதம் சுலபதவணையாக பெற்றுக்கொள்கிறார்கள். இந்த மீதி பணத்திற்கு அவர்கள் வட்டி என்று ஒன்றுமே வசூலிப்பதும் கிடையாது. பாதித் தொகை கடனாகக் கொடுக்கும்போதும், சொத்து ஜாமீனோ, தனி நபர் ஜாமீனோ கேட்பதும் கிடையாது.
இப்பொழுது நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். உங்கள் பணத்தை வங்கியில் முதலீடு செய்யபோகிறீர்களா? அல்லது தங்கத்தில் முதலீடு செய்யபோகிறீர்களா? அல்லது நிலம் வாங்கிப்போட்டு சில வருடங்கள் மட்டும் காத்திருந்து உங்கள் சொத்தை பல மடங்கு அதிகமாக விற்று உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் ஒரு பிரகாசமான பொருளாதார வசதியுடன் கூடிய எதிர்காலத்தை உருவாக்கப்போகிறீர்களா? முடிவு உங்கள் கையில்.