யோகாவுக்கும் ஜிம்முக்கும் இடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன என்பதைப் பற்றித்தான் இந்தச் செய்தியின் மூலமாக நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
உங்கள் உடல் முழுவதும் இருக்கிற தசைகளெல்லாம் இறுகி ஒரு புதிய தோற்றம் பெறவேண்டுமா? அல்லவென்றால் உங்கள் தேகத்தின் அனைத்து உறுப்புகளையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி உருவாக்க வேண்டுமா? இந்த இரண்டில் எந்த வகையை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்? அதற்கான உங்கள் நோக்கம் என்னவென்பதை முதலில் நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். யோகா வேண்டுமா இல்லையென்றால் ஜிம் வேண்டுமா என்பதனை குறித்த தீர்மானம் உங்கள் வசம்தான் உள்ளது.
இதிலே மிக முக்கியமாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் இது ஒரு போட்டிக்கான விஷயமும் அல்ல. எனவே இதிலே வெற்றி எது? தோல்வி எது? என்கிற ஒரு கேள்விக்கே இடமில்லை என்பதனை முதலில் நீங்கள் உங்களுடைய மனதில் கொள்ளவேண்டும்.
யோகாசனங்களும் உடல் நலனுக்கு தேவையான ஒன்றுதான். இருந்தாலும், குறிப்பிட்ட வாரங்களுக்குள் அல்லது மாதங்களுக்குள் இந்த விஷயத்தில் நீங்கள் ஒரு இலக்கை அடைய வேண்டுமென்றால் நீங்கள் ஜிம் பயிற்சியைத்தான் தேர்வு செய்யவேண்டியிருக்கும்.
இவை இரண்டிலுமே நல்ல பலன்கள் இருப்பதால், இரண்டையுமே சேர்த்து பயனடைவதே ஏற்புடையதாக இருக்கும். அவ்வாறு ஒரு தீர்மானம் எடுத்து மேற்கொண்டு செயல்படுவதன் மூலமாக உங்கள் உடலையும் உள்ளத்தையம் எப்போதும் ஆரோக்கியமாகவும் கட்டுப்பாட்டுடனும் வைத்துக்கொள்ளலாம். அல்லது முதலில் ஒன்றைத் தேர்வு செய்து அதை முயற்சித்து அறிந்துகொண்டு அடுத்ததாக மற்றொண்டை முயற்சித்துப் பார்க்கும்போது உங்களுக்கு சரியானது எதுவென்று நீங்களே முடிவு செய்துகொள்ள முடியும்.
இப்போது நான் யோகா மற்றும் ஜிம் இரண்டையும் இப்போது கொஞ்சம் ஒப்பிட்டுப் பாப்போம்.
எல்லா யோகாசன நிலைகளையும் நாம் மென்மையானதாக எடுத்துக்கொள்ள முடியாது. அவற்றிலும், சில கடினமான ஆசன நிலைகள் இருக்கத்தான் செய்கின்றன. யோகாசனப் பயிற்சி மூலம் நமது உடலில் 60 நிமிடங்களில் சுமார் 300 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. சில கடினமான யோகா நிலைகளைப் பயிற்சிசெய்வதன் மூலமாக அதே 60 நிமிடங்களில் இன்னும் அதிகமாக 60 கலோரிகள் எரிக்கப்படலாம்.
.
யோகாவின் மூலம் உடல் எடையைக் குறைப்பது என்கிற காரியம் சற்று மெதுவாகவே நடைபெறும். ஆனாலும் ஜிம் பயிற்சியில் உடல் எடை குறைப்பார்களையும் யோகாசனங்கள் வாயிலாக உடல் எடை குறைப்பவர்களையும் நாம் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு உண்மையைக் கண்டுகொள்ளலாம். ஜிம் பயிற்சி வாயிலாகக் கிடைக்கும் எடை குறைப்பை விட யோகா பயிற்சி மூலம் எடை குறைப்பது நீடித்திருக்கும் என்பது பலருடைய அனுபவ ரீதியான உண்மை.
ஜிம்
ஜிம் பயிற்சிமூலம் ஒரு மணி நேரத்தில் நமது உடலில் யோகாசனத்தை விட இரண்டு மடங்கு கலோரிகள் எரிக்கப்படுகின்றன. மிகச் சீக்கிரமாக உடல் எடை குறைய வாய்ப்புகள் அதிகமுள்ளதால்தான் இளம் வயதினர் யோகாசனத்தை விடுத்து ஜிம் பயிற்சியைத் தேர்வு செய்கின்றனர்.
பொதுவாக யோகாசனங்கள் பயிலும்போது முதுகெலும்பு நன்றாக வளைக்கப்படுகிறது. சீராக மூச்சு உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்றப்படுகிறது. இதுதான் ஹத யோகாவின் தனிச் சிறப்பாகும். யோகா ஆசிரியருடைய ஆலோசனையின் பிரகாரம் உங்கள் பிரச்சினைகள் மற்றும் தேவைகளுக்கு தக்கவாறு குறிப்பிட்ட ஆசனங்களைத் தேர்வு செய்து அவைகளை நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்து வருவதன் மூலம் உங்கள் தேவைகள் பூர்த்தியடையும் என்பது திண்ணம்.
ஜிம்மைப் பொறுத்தமட்டில், உபயோகிக்கும் உபகரணங்கள் பொறுத்தே ஜிம் பயிற்சிகளும் இருக்கும். அநேகமாக அனைத்து ஜிம் பயிற்சிக் கூடங்களிலும் குறிப்பிட்ட உடல்பயிற்சிக்கான அனைத்து இயந்திரங்களும் பொருத்தப்பட்டிருக்கும். அந்தக் குறிப்பிட்ட இயந்திரம் மூலமாகா உங்களுடைய குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண பயிற்சி அளிக்கப்படும். அதேசமயம் ஜிம் பயிற்சிமூலமா நமது உடலிலுள்ள கலோரிகள் வேகமாக எரிக்கப்படுகின்றன.
யோகாவைப் பொறுத்தமட்டில், காற்றோட்டமான நல்ல ஒரு சுத்தமான அறை மற்றும் தரையில் விரிப்பதற்கு ஒரு பெட் சீட் அல்லது ஒரு பாய் இருந்தால் போதும், நாம் யோகா பயிற்சிகளை சுலபமாக பெரிய செலவுகள் எதுவுமில்லாமலே செய்ய ஆரம்பித்துவிடலாம். யோகா உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும் மனதிற்கு அமைதியையும் தருகிறது என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிற ஒரு உண்மை.
ஏற்கனவே கூறியது போல ஜிம் பயிற்சி ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான உபகரணம் அவசியமாகிறது. உபகாரணமில்லாமல் ஜிம்பயிற்சி செய்வது என்பது கூடாத காரியம்.
யோகாசனங்கள் அனைத்துமே எல்லோருக்கும் பாதுகாப்பானது. ஆண்கள் பெண்கள் பேதமில்லாமல் குழந்தைகள் முதற்கொண்டு முதியவர்கள் வரை அனைவருமே யோகா பயிற்சி செய்யலாம். கர்பிணிப் பெண்களுக்கென்று பிரத்தியேகமான யோகாசனங்களையும் கற்பிக்கிறார்கள். குறிப்பிட்ட வியாதியஸ்தர்களுக்கும் கூட யோகா பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டு தீர்வு எட்டப்படுகிறது.
ஜிம்பயிற்சியில் அநேகமான ஒர்க்கவுட் பயிற்சிகள் அதிகமாகவும் தீவிரமாகவும் செய்யவேண்டும். சுயமாகச் செயல்படும்போது காயங்கள் உண்டாகலாம். இருதயத்தில் பிரச்சினை உள்ளவர்கள் ஜிம் பயிற்சி செய்யக்கூடாது. அத்தனையும் மீறி ஆர்வக்கோளாறினால் இவர்கள் ஜிம் பயிற்சியில் ஈடுபட்டால், உயிருக்கே ஆபத்தாய் முடியவும் வாய்ப்புண்டு.
யோகா பயிற்சிகளிலே குறிப்பாக முதுகெலும்பு நன்றாக வளைக்கப்படுவதோடு உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் பயிற்சி தரப்படுவதால் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. யோகா பயிற்சியின்போது நாம் காயமடைய வாய்ப்பில்லை. விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்பவர்களும் யோகா பயிற்சிதனை மேற்கொள்வதால் அவர்களுடைய மன அழுத்தம் நீங்கி மனதிலே ஒரு அமைதியையும் உருவாக்குகிறது. இதன் மூலமாக, விளையாட்டுப் போட்டிகளில் அவர்கள் வெற்றிபெறவும் வழி வகுத்துக் கொடுக்கிறது யோகா பயிற்சி.
ஜிம்மைப் பொறுத்தமட்டில் மாரத்தான் போட்டியாளர்களுக்கு உகந்தது. உலகளாவிய ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்பவர்களுக்கு ஜிம் பயிற்சி ஏற்றதான ஒன்று.
யோகாசனப் பயிற்சியில் ஈடுபடும்போது உடலிலுள்ள தசைப் பாகங்கள் இறுக்கமடையத்தான் செய்கின்றன. யோகா மூலமாக ஆரோக்கியம் உடலுக்குத் தரப்படுவது நிச்சயம். இருந்தாலும்,யோகா மூலமாக கட்டான உடல் அமைப்பைப் பெற்றுக்கொள்ள இயலாது.
உறக்கம் வராமல் கஷ்டப்படுகிறவர்கள் யோகா பயிற்சி மூலமாக நிச்சயமாக ஒரு தீர்வு காண முடியும். யோகா செய்பவர்கள் எல்லோருமே அநேகமாக படுத்தவுடனே உறங்கிவிடுவார்கள். உறக்கமின்மையைப் போக்க யோகா பயிற்சி ஒரு அருமருந்தாகும்.
ஜிம் பயிற்சிகளையும் குறை சொல்வதற்கில்லை. அதிலும் உங்கள் மனநிலை அமைதி பெறுகிறது, சந்தோசம் அடைகிறது. ரிலாக்ஸ் கொடுக்கவும் செய்கிறது என்பது உண்மை. நிறைவான பலன்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் காலையில் யோகா பயிற்சி, மாலையில் ஜிம் பயிற்சியில் ஈடுபடலாம். அல்லது ஒரு நாள் யோகா பயிற்சி, மறுநாள் ஜிம் பயிற்சி செய்யலாம். ஒரு நாள் விட்டு அடுத்த நாளும் இவ்வாறு செய்து முழுப் பலனையும் பெற்றுக்கொள்ளலாம்.
வயிற்றுப்போக்கு குணமாக பாட்டி வைத்தியம்