வியக்க வைக்கும் நல்லெண்ணெய் மருத்துவம் ரீபைன்ட் ஆயில் போன்ற மற்ற எண்ணெய்களை விட நல்லெண்ணெதான் சமையலுக்கு நல்லது. நல்லெண்ணையை காலையிலே வயிறு வெறுமையாக இருக்கும்போது ஒரே ஒரு தேநீர் கரண்டி அளவு குடித்தால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நலன் பயக்கும். மேலும் இங்கே நல்லெண்ணெ உபயோகிப்பதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களைக் குறித்துக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். இந்த நல்ல விஷயங்களை அறிந்து கொண்டபின்பு கட்டாயம் உங்கள் சமையலில் எப்போதும் நல்லெண்ணெய் உபயோகித்து நலம் பெறுங்கள். இயற்கை உபாதை – மலச்சிக்கல்: காலையிலே வயிறு வெறுமையாக இருக்கும்போது நல்லெண்ணை எடுத்துக்கொண்டால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கலுள்ளவர்கள் சிரமப்படாமல் இயற்கை உபாதையைக் கழிக்கலாம். […]