Stomach ulcer foods to eat and avoid

stomach ulcer foods to eat and avoid

i Coffee for Diabetes

வயிற்று புண் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள் | stomach ulcer foods to eat and avoid

நமது முன்னோர்கள் கடைபிடித்துவந்த சாப்பிடும் முறைகளை தற்காலத்தில் நாம் அனைவரும் முற்றிலுமாக மாற்றிஅமைத்துவிட்டதனால் உண்டாகும் நோய்தான் வயிற்றுப்புண்ணாகும்.

அந்ததந்த சாப்பாட்டை அந்தந்த சமயத்திற்கு காலம் தாழ்த்தாமல் உண்ணவேண்டுமா? ஐயோ, அதெல்லாம் நமக்கு செட் ஆகாதுங்க. இப்படிச்சொல்லிக்கொண்டு ஆபிசுக்கு போகும் ஆண் பெண் இருபாலரும் தங்களுடைய காலை சிற்றுண்டியைத் தவிர்த்துவருகிறார்கள்.இப்படிச் செய்வதால், அல்சர் வருவதற்கு அவர்களே வழி வகுத்துக் கொடுத்துவிடுகிறார்கள். எனவே குடல் புண் வந்து சிரமப்படுகிறார்கள்.

i charge natural rejuvenation benefits

குடல்புண் அல்லது அல்சர் என்பது நமது வயிற்றுப்பகுதியில் உண்டாகும் குடல்புண்கள். உணவுப்பாதை, இரைப்பை மேலும் சிறுகுடலினுடைய ஆரம்பப் பாகத்தியின் உள் பகுதியில் உண்டாகும் புண்ணைத்தான் குடற்புண் என்று கூறுகிறோம்.

* நமது இரைப்பைதனில் உண்டாகும் புண்ணை கேஸ்ட்ரிக் அல்சர் எனக் கூறுகிறோம்.
* உணவுக் குழாயில் உண்டாகிற புண்ணை ஈசோபேகல் அல்சர் என அழைக்கிறோம்.
*சிறிய குடலினுடைய ஆரம்பபாகத்தில் ஏற்படும் புண்வகையை டிடனல் அல்சர் எனச் சொல்லுகிறோம்.

பாக்டீரியா மூலம் உண்டாகிற தொற்று (Helicobacter pylori)
மன உளைச்சலெனப்படும் ஸ்ட்ரெஸ்
மிதமிஞ்சிய சொந்தக்கவலைகள்
முற்றிலும் தவறான சாப்பாட்டு முறை
குறிப்பிட்ட மருந்துதனை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது
அளவுக்கதிகமான காபி போன்ற பானங்கள் அருந்துவது
மசாலை நிறைந்த காரமான உணவு வகைகளை அடிக்கடி உண்பது ஆகிய பலதரப்பட்ட பல்வேறு காரணங்களினால் குடல்புண் உண்டாகிறது.

காபியில் உள்ள கெஃபைன், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிப்பதால், வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் காபியைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். கடுமையான வயிற்று வலி ஏற்படுவதோடு, நோயின் தீவிரத்தையும் அதிகமாக்கிவிடும். கெஃபைன் அதிகமாக இருக்கும் டீ, சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

Viva i Slim Weight Management Support

குடற்புண்ணால் அவதிப்படுகிறவர்கள் காபி அருந்துவதை உறுதியாகக் கைவிடவேண்டும். தாங்கமுடியாத வலி வயிற்றில் உண்டாவதோடு, நோயினுடைய தீவிரத்தன்மையை உயர்த்திவிடும். கெஃபைன் மிகுதியாக உள்ள தேநீர், சாக்லேட் வகைகள் , ஐஸ் கிரீம் வகைகள் ஆகியவற்றை உண்ணவோ அருந்தவோ கூடாது.

காரம் நிறைந்த உணவு வகைகள், மசாலை மிகுதியாக உள்ள உணவுபொருட்களை உண்ணுவதால் ஜீரணமாவது சிரமமாக மாறும். மேற்கொண்டு குடல் புண்னுள்ளவர்கள் இப்படிப்பட்ட உணவுதனை உண்ணும்போது, அதீதமான வலி வயிற்றுப்பகுதியில் உண்டாகும். ஆகையால் பச்சைமிளகாய், கருப்புமிளகு, இட்டலிப்பொடி இவைகளையெல்லாம் உங்கள் சாப்பிட்டு அட்டவணையிலிருந்து அகற்றிவிடவேண்டும்.

பாலானது வயிற்றில் அமிலம் சுரக்கும் அளவை கூட்டிவிடுகிறது. மேலும் பாலிலுள்ள மிகுதியான கொழுப்பு சக்தி, புரோட்டீன் குடல்புண் குணமாகும் காலத்தை நீட்டிக்கிறது.

குளிரூட்டப்பட்ட பானங்கள், சோடா வகைகள் இவைகளை அருந்தும் பழக்கத்தை முழுவதுமாக விட்டுவிடுங்கள். இந்த பானங்களிலுள்ள சிட்ரிக் வகை அமிலமானது வயிற்றில் சுரக்கும் அமிலத்தாய் கூட்டிவிடுகிறது. மேலும் அஜீரணப் பிரச்சினைகளையும் கொண்டுவந்துவிடுகிறது.

கட்டாயமாக மதுபானங்களை உட்கொள்ளவேகூடாது. இத் தீய செயல் குடற்புண்ணின் தன்மையை மேலும் உயர்த்திவிடும். கூடவே வயிற்றினுள் சிறுகுடல் பகுதியில் மோசமான எரிச்சலை ஏற்படுத்தி வீக்கத்திற்கு வழி வகுத்துவிடும்.

i Pulse Health Drink Benefits

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Close menu
Close menu