உடல் ஆரோக்கியம் காப்பாற்ற உதவிடும் சிறந்த, மிகவும் எளிய பத்து ஆரோக்கியம் சார்ந்த பாட்டி வைத்தியம் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா?
1) Aloe Vera என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிற சோத்து கத்தாழையுடைய தோலை அகற்றி எடுத்து மையப் பகுதிதனை சிறிய கத்தியால் வெட்டித்திறந்து அதின் கசப்பாக இருக்கும் சாறுதனை மட்டும் எடுத்து அந்த சாற்றை புளிப்பில்லாத மோருடன் சேர்த்து ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கத் தொடங்கினால் வயிற்றுப்புண் முற்றிலும் ஆறி இயல்பு நிலைக்கு சில வாரங்களில் திரும்பலாம். மேற்கொண்டு உங்கள் தோற்றம் முதுமையடையாமல், என்றும் இளமையாக வைத்துக்கொள்ள இந்த பழக்கம் உதவும்.
2) அனுதினமும் காலையிலோ அல்லது மாலையிலோ பெரிய காட்டு நெல்லிக்காயொன்றை நன்றாக அசைபோட்டு சுவைத்து உண்டு வருவீர்களானால் வெகு நாட்களாக தொல்லை கொடுத்துவரும் எந்தவொரு சருமம் சம்பத்தப்பட்ட வியாதியும் சீக்கிரம் குணம்பெறும்.எந்தவொரு நோய்தனையும் எதிர்க்கக்கூடிய உங்கள் உடலுக்கு வேண்டிய ஆற்றல் மளமளவென்று உடலிலே அதிகமாவதுடன் உங்கள் அழகிய முகத்தின் வசீகரமும் அதிகரிக்கும்
3) டயாபெடிக் என்று சொல்லப்படுகிற சர்க்கரை நோயாளியா நீங்கள்? உங்கள் இரத்தத்தில் இருக்கிற சர்க்கரையின் அளவு குறையவேண்டுமானால் அரைத்த வெந்தயம் அனுதினமும் காலையில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீருடன் சேர்த்து அருந்திவந்தால் நல்ல சுகம் பெறலாம். இதனுடன் நீங்கள் சிறியாநங்கை அல்லது பெரியாநங்கை இவற்றின் சாறுடன் கலந்தும் உபயோகிக்கலாம்.
4) செம்பருத்திப் பூக்களை நிழலில் உலரவைத்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து நன்றாக உலர்ந்த பூக்களைப் பொடி செய்து, குளிக்கும்போது ஷாம்பு அல்லது சோப்பு அல்லது சீயக்காய் எதுவும் உபயோகிக்காமல் செம்பருத்திப்பூ பொடியை மட்டும் தலையில் தேய்த்து கொஞ்ச நேரம் ஊறவைத்து பின்பு தண்ணீர் கொண்டு கழுவினால் உங்கள் தலையில் இருக்கும் பொடுகு எல்லாம் காணாமல் போய்விடும். உங்கள் கேசமும் கருகருவென்று அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். உங்கள் தலை மயிர் உதிர்வதும் முற்றுப்பெறும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இப்படி நீங்கள் செம்பருத்திப்பூ பொடி தேய்த்து நீராடுவதால் உங்கள் உடல் சூடு தணிந்து போவது மட்டுமல்லாமல் உங்கள் கண்களும் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.
5) தீவிரமான சுவாசப் பிரச்சினை, ஆஸ்துமா, கடுமையான இருமல் மற்றும் கபம் இவைகளால் கஷ்டப்படும் சிறுகுழந்தைகள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் உங்களிடம் இருந்தால், அவர்களுக்கு குப்பைமேனி இலையின் சாறு எடுத்து தினசரி கொஞ்சம் புகட்டிவிட்டால் சளி மற்றும் சுவாசம் சம்பத்தப்பட்ட வியாதிகள் அனைத்துக்கும் தீர்வு உண்டாகி அரோக்கியம் பெறலாம். கொஞ்சமாகக் கொடுக்கவேண்டுமே சிறிது அதிகமாக கொடுத்தாலும் குழந்தைகளுக்கு பேதியாகிவிடும். கவனமாக இருத்தல் அவசியம்.இரவு நேரம் உறக்கம் கொள்ளாமல் துன்பப்படுகிறவர்கள் கொஞ்சம் சுடுதண்ணீர் குடித்துவிட்டு அப்புறம் தூங்கச்சென்றால் நன்றாக உறக்கம் வரும். தினசரி இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து கொஞ்சம் காய்ச்சின பசும்பால் அருந்திவிட்டு உறங்கச்சென்றால்,கெட்ட கனவுகள் வராது. உறக்கமும் நன்றாக வரும். அதிகாலைவரை ஆழ்ந்து உறங்கி எழலாம். நீரிழிவு வியாதி இல்லாதவர்கள் கொஞ்சம் பனைவெல்லம், இல்லையென்றால் நாட்டுச்சர்க்கரை உண்டுவிட்டு துயில்கொல்லப் போகலாம். நன்றாக உறக்கம் வரும்.
6) சாறு எடுக்கிற அளவுக்கு அருகம்புல் பிடுங்கி, நன்றாகக் கழுவி நிழலில் உலரவைத்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து பொடி செய்து குடிநீருடன் சேர்த்து ஏழு நாட்களுக்கு ஒருமுறையாவது உண்டுவந்தால் உங்கள் உடல்சூடு தணிந்து, இரத்தமும் சுத்தம்பெறும். அருகம்புல்லிலிருந்து சாறு எடுத்து வாரம் ஒருமுறையாவது பருகிவர அதே பலன் கிடைக்கும்.எவ்வளவு பெரிய பிரசித்தி பெற்ற மருத்துவமனைக்கும் சென்று எவ்வளவு திறமைவாய்ந்த மருத்துவரையும் அணுகி, எவ்வளவு சக்திவாய்ந்த விலையுயர்ந்த மருந்து, மாத்திரைகளை உட்கொண்டாலும் ஒருவேளை நீங்கள் புகைபிடிக்கிற தீய பழக்கத்திற்கும் மது அருந்தும் கெட்ட காரியத்திற்கும் அடிமையானவராக இருந்தால், நீங்கள் உட்கொள்ளும் மருந்து மற்றும் மாத்திரை, இஞ்செக்ஸ்ன் எதுவுமே முழுமையாக சுகம் கொடுக்க முடியாமல் போய்விடும்.
7) உங்கள் சருமம் நிறம் மாறுதல், தேமல் போன்ற பிரச்சினைகளுக்கு இது அருமருந்தாகும்.சிறிதளவு வெள்ளைபூண்டுடன் வெத்திலை கொஞ்சம் கலந்து நன்றாக பேஸ்ட் போல மசிய அரைத்து அந்தக் கலவையை உங்கள் பாதிக்கப்பட்ட சருமப் பகுதியில் தேய்த்து இருப்பது நிமிடங்களாவது கழித்து ஸ்நானம் செய்துவந்தீர்களானால் விரைவில் பூரண சுகம் பெற்றுக்கொள்ளலாம்.
உங்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை தொடர்ந்து இருந்துவருகிறதா? இதோ ஒரு அருமருந்து! வாரத்திற்க்கு மூன்றுமுறையாவது அகத்திக் கீரை சமைத்து மத்திய உணவுடன் சாப்பிட்டு வந்தால் உங்கள் இரத்த அழுத்தம் ஒரே சீராக இருக்கும்.