Industrial and Scientific Products:
பொதுவாக நடுத்தர வர்க்கம் மற்றும் அந்த நிலைக்கும் சற்றுக் கீழே உள்ளவர்கள் எப்படி சேமிக்கிறோம்?
1) சம்பாதிக்கிறோம்.
2) செலவு செய்கிறோம்.
3) கடைசியாக மீந்ததைச் சேமிக்கிறோம்.
ஆனால் கீழ்கண்ட சூத்திரத்தை பின்பற்றுபவர்கள் கடன் பிரச்சனையில் சிக்கிக்கிகொளவ்தும் இல்லை. மேலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையிலே தங்கள் சுய சம்பாத்தியத்திலேயே கீழ்கண்ட முறையைப் பின்பற்றி கட்டாயம் செல்வந்தர்கள் ஆகிவிடுகின்றனர்.
1) இவர்கள் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்.
2) சம்பளம் வாங்கியவுடன் முதலில் கட்டாயமாக சேமிப்புக்கென்று ஒரு நல்ல தொகையை தனியாக எடுத்து வைக்கிறார்கள்.
3) மீதமுள்ளதை மட்டும் வைத்து சிக்கனமாக செலவு செய்கிறார்கள்.
4) அனாவசிய செலவுகள் மற்றும் ஆடம்பர செலவுகளை முற்றிலும் தவிர்க்கிறார்கள்.
5) அதற்காக இவர்களை யாரும் கஞ்சன் என்று பட்டம் சூட்டி அழைத்தாலும் அதற்காக கொஞ்சம் கூட கவலைப்படமாட்டார்கள்.
7) சேமித்த பணத்தை கொண்டு 3 வருடங்களுக்கு ஒரு முறையாவது சிறிய அளவில் சொத்துக்கள் வாங்கி வைக்கிறார்கள்.
8) குறைந்தது 5 வருடங்கள் அல்லது அதற்கும் கொஞ்சம் அதிக காலமானாலும் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள்.
9) நல்ல விலை வரும்போது தங்கள் வாங்கிப்போட்ட நிலங்களை / சொத்துக்களை விற்கிறார்கள்.
10) விற்ற பணத்தில் கிடைக்கும் லாபத்தை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, மீதிப்பணத்தைக் கொண்டு மறுபடியும் சொத்துக்களை வாங்குகிறார்கள்.
12) மூலதனத்தை என்றைக்குமே எடுத்து செலவு செய்யவே மாட்டார்கள். கிடைக்கும் லாபத்தை மட்டும் எடுத்து, கார் அல்லது ஸ்கூட்டர், நகை, மொபைல் போன்,, குடும்பத்துடன் வெளியூர் சென்று மகிழ்தல் போன்றவற்றுக்காக செலவு செய்கிறார்கள்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்?
சம்பளப் பணத்தை வைத்து ஆடம்பர செலவுகள் நிறைய செய்கிறோம். மற்றவர்களோடு போட்டி போட்டுகொண்டு விலை உயர்ந்த ஆடைகள், வாகனங்கள், நகைகள், மொபைல் போன் இத்யாதி இத்யாதி போன்ற செலவுகள் செய்கிறோம். எதிர்காலத்தைக் குறித்த பொருளாதார திட்டம் ஏதும் இல்லாமல், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்ந்து தொலைக்கிறோம்.
மனம் ஆசைப்பட்டதையெல்லாம் கிரெடிட் கார்டு மூலம் வாங்கி குவிக்கிறோம். நம்முடைய சம்பள பணத்தில் பாதிக்கு மேல் EMI கட்டுவதற்கே போய் விடுகிறது. இந்த கொரானா காலத்தில், அநேகர் வேலையை இழந்துவிட்டார்கள் அல்லது சம்பளம் பாதியாகக் குறைந்துவிட்டது. அல்லது வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பர் கொடுக்கப்படுகிறது. எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது.
இப்பொழுது புரிகிறதா உங்களுக்கு, நீங்கள் இனிமேலாவது என்ன செய்யவேண்டும் என்று? எப்படி வாழ வேண்டுமென்று கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் பூரணமாக அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், அது யாராலும் முடியாத காரியம். ஏதாவது ஒன்றை விட்டுக்கொடுத்தால்தான் மற்றொன்றைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
புரிந்துகொண்டீர்களா? உங்கள் கேள்விக்கு சரியான பதில் கிடைத்துவிட்டதா? ராசிபலன்களையும், ஜோதிடங்களையும் நம்பி உங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிடாதீர்கள்.
இறைவன் உங்களுக்கு கொடுத்திருக்கிற உங்கள் அறிவை உபயோகப்படுத்தி, அனாவசிய மற்றும் ஆடம்பர செலவுகளை முற்றிலும் தவிர்த்து, சேமிப்பில் கவனம் செலுத்தி, நீங்கள் சேமித்த பணத்தில் சொத்துக்களை தொடர்ச்சியாக வாங்கிப்போட்டு, உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் பிள்ளைகள், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள் என்று உங்கள் சந்ததிக்கே நீங்கள் ஒரு பிரகாசமான பொருளாதாரத்துடன் கூடிய ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
Industrial and Scientific Products:
முடியும், கட்டாயம் முடியும் என்பதை உறுதியாகவும், இறுதியாகவும் கூறிக்கொண்டு என்னுடைய இந்த பதிலை எல்லோருடைய நன்மைக்காகவும் சமர்ப்பிக்கிறேன்.