fraud-3229757_640

நீங்கள் எதில் முதலீடு செய்யலாம் என்பது உங்கள் வசம் உள்ள பணத்தின் அளவைப் பொறுத்தது.

 

உங்களிடம் ரூபாய் 5000 இருந்தால் 1 கிராம் தங்கம் வாங்கி சேமிப்பு செய்யலாம்.

 

உங்களிடம் ரூபாய் இரண்டு லட்சம் இருந்தால் 5 பவுன் தங்க நகை வாங்கி சேமிக்கலாம்.

 

தங்கத்தில் முதலீடு செய்யும்போது உங்கள் பணத்தின் வளர்ச்சி விகிதம் வருடத்திற்கு 8% முதல் 9% சதவீதமாக இருக்கும்.

 

பணம் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதே சமயத்தில் எப்பொழுது வேண்டுமானாலும், அவசரத்திற்கு அந்தப் பணத்தை எடுத்துக்கொள்ளுகிற மாதிரி இருக்கவேண்டுமானால், வங்கியில் வைப்பு நிதியில் பணத்தை செலுத்துங்கள். உங்களுக்கு வருடத்திற்கு 6% மட்டுமே வட்டியாகத் தரப்படும். சேமிப்பு கணக்கில் உங்கள் பணத்தைப் போட்டால், உங்களுக்கு வட்டியாக ஒன்றும் கிடைக்காது.

 

ஆயுள் பாதுகாப்பு நிறுவனத்தில் நல்ல நல்ல திட்டங்களுடன் புதிய பாலிசிக்களை அறிமுகப்படுத்துகிறார். அங்கேயும் உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். அவர்கள் நமக்குத் தரும் வட்டி வருடத்திற்கு 6% மட்டுமே.

 

அஞ்சல் அலுவலகத்திலும் அவர்கள் நமக்குத் தரும் வட்டி 6% மட்டுமே. கிஷான் விகாஷ் என்கிற திட்டத்தில் பணத்தைப் போட்டால் 1% கூடுதலாக வட்டி கிடைக்கும். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு உங்கள் பணத்தை அவசரத்திற்கு எடுக்க முடியாது.

 

ஷேர் மார்க்கெட்டில் விலை குறைவாக இருக்கும் ஷேர்களை வாங்கி, விலை உயரும்போது அந்த ஷேர்களை விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். அதே சமயம், பெருத்த நஷ்டமும் ஏற்படலாம். ஏனென்றால், ஷேர் மார்க்கெட்டிங் செய்வது சூதாட்டத்திற்கு சமம். பெரிய பெரிய கோடீஸ்வரர்களும் கூட திவாலாகிப் போனதுண்டு.

 

பான் புரோக்கர் என்று சொல்லப்படுகிற நகைகளை அடைமானம் பெற்று மாதத்திற்கு 3% வட்டிக்குப் பணம் கொடுக்கிறார்கள். வருடத்திற்கு 36% வட்டிப்பணம் கிடைக்கும். ஆனால் முதலீடு செய்வதற்கு நிறையப் பணம் தேவை. உங்களிடம்தான் திருட்டு நகைகளை விற்றேன் என்று போலீசாரிடம் எவனாவது ஒரு திருடன் தவறுதலாகச் சொன்னால்கூட உங்களுக்கு இடியாப்பச் சிக்கல்கள் உண்டாகும்.

எனக்கும் என் பிள்ளைகளுக்கும், சந்ததிக்கும் நல்ல பெருளாதார எதிர்காலத்தை உருவாகும் வேண்டும் என்று ஆசைப்பட்டால் உங்கள் பணத்தை நிலத்தில் முதலீடு செய்யுங்கள். நீங்கள் இப்பொழுது நகரத்தில் வாசிக்கிறவராக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் ஏதாவது கிராமத்தில் பிறந்தவர்களாக இருப்பீர்களானால், அங்கே விவசாய நிலத்தை வாங்கிப் போடுங்கள். ஒரு ஏக்கர் விவசாய நிலம் ரூபாய் 1 லட்சத்திற்கு இப்பொழுது கூடக் கிடைக்கிறது. அதில் நம்பிக்கையான அனுபவமுள்ள விவசாயிகளை வேலை செய்ய வைத்து கை நிறைய சம்பாதிக்கலாம்.

 

உங்களிடம் ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் பணம் இருந்தால், நீங்கள் இருக்கும் ஊருக்கு வெளியே குறைந்த பட்சம் 1500 சதுர அடி நிலம் கிடைத்தால் கூட வாங்கிப்போடுங்கள். வில்லங்கம் இல்லாத நிலமாக இருத்தல் அவசியம். இல்லையென்றால் பெரிய சட்டச் சிக்கல்கள் வந்து கோர்ட்டு கேஸ் என்று வருடக்கணக்கில் அலைய நேரிடும். நல்ல பிரச்னை இல்லாத நிலத்தில் நீங்கள் முதலீடு செய்யும்போது உங்களுக்குத் பலமடங்கு லாபம் கிடைக்கும் சில வருடங்களிலேயே.

 

வங்கியிலோ அல்லது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலோ அல்லது அஞ்சல் அலுவலகத்திலோ நீங்கள் பணத்தை வைப்பீடு செய்தால், உங்கள் பணம் இரட்டிப்பாக 12 வருடங்களாகும். அதாவது உங்கள் பணம் இரண்டு மடங்காக பெருக அவர்கள் 12 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

 

உங்கள் பணம் அதே 12 வருடங்களில் 16 மடங்காகப் பெருக்கவேண்டுமா? நிலத்தில் முதலீடு செய்யுங்கள். இப்பொழுதும் நேர்மையாக தொழில் செய்கிற கார்பொரேட் நிறுவனங்கள் ஒரு சில இருக்கத்தான் செய்கின்றன. அவர்களோடு உங்களை இணைத்துக்கொண்டு அவர்களிடமே நிலங்களை வாங்கி பொருளாதார ரீதியாக மேம்படுங்கள்.

 

நல்ல வளர்ந்து வருகிற இடங்களாகப் பார்த்துத் தேர்வு செய்து, பெரிய அளவில் பல ஊர்களில் நிலங்களை வாங்கி, நியாயமான விலைக்கு இன்னும் சொல்லப்போனால் மிகவும் குறைந்த விலைக்கு அவர்கள் நிலங்களை விற்று வருகிறார்கள். அவர்களிடம் நீங்கள் நிலத்தை வாங்கினால் உங்கள் பணம் 12 வருடங்களில் 16 மடங்கு பெருகுகிறது. ( வங்கிகளில் பணம் செலுத்தினால், உங்கள் பணம் 12 வருடங்களில் 2 மடங்காக மட்டும் பெருகுகிறது)

 

அந்த நல்ல நிறுவனங்களை பற்றி நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுமானால், மேற்கொண்டு இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் விரும்புகிற பிரகாரம் இயற்கையோடு இணைந்த சூழ்நிலையோடு கூடிய ஒரு அருமையான இடத்தில ரூபாய் 12 லட்சத்திற்கு ஒரு ஏக்கர் நிலம் வாங்கலாம்.

CONTACT PERSON:

A..X. VINO RAYEN

NEOMAX PROPERTIES PVT LTD.,

MOBILE PHONE #: +91 6382958461

WHATSAPP: +91 944387202

email address: vinorayen@gmail.com

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Close menu
Close menu