Navasana Benefits in Tamil
யோகாசனங்களில் பல நிலைகள் இருக்கின்றன. அந்தந்த ஒவ்வொரு ஆசனம் செய்யும்போது அதற்குரிய தனித்துவமான நன்மைகள் நிச்சயமாக அடையலாம். அப்படிப் பார்க்கும்போது நவாசனம் என்று சொல்லப்படுகிற நவுக்காசனம் நமது சிறுகுடலுக்கும் பெருங்குடலுக்கும் சேர்த்தே பலன் கொடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால், நோய்களை எதிர்க்கும் ஆற்றல் நமது உடலில் மேம்படுகிறது.
இபொழுது நாம் நவுகாசனம் அல்லது நவாசனம் பற்றிய செய்முறை வழக்கத்தைப் பார்ப்போம் வாருங்கள்.
.
முதலாவதாக உங்கள் இரண்டு கைகளையம் பக்கவாட்டிலே வைத்தவாறு மல்லாக்க
படுத்துக் கொள்ளவேண்டும். உங்கள் இரண்டு கால்களையும் கொஞ்சம் அகலமாகவே வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் இரண்டு கைகளையும் உடம்பின் அருகிருந்து சிறிது தூரம் நகர்த்தி வைத்துக்கொள்ளுதல் அவசியம்.
இப்பொழுது உங்கள் சுவாசத்தை நிதானமாக உள்ளிழுத்து மிகவும் நிதானமாகவும் மெதுமாகவும் பொறுமை கடைபிடித்து வெளியேற்ற வேண்டும். பின்பு உங்கள் கால்களிரண்டையும் ஒருசேர அருகிலிருக்குமாறு வைத்திருப்பது முக்கியம்.
கைகளிரண்டையும் உடலோடு இணைத்து வைத்திருங்கள். வயிற்றிலுள்ள மூச்சுக் காற்றை முழுவதுமாக மூக்கின் வழியாக வெளியேற்ற வேண்டும். பிறகு மூச்சை ஆழமாக உள்ளே இழுத்துக்கொண்டே உங்கள் கால்களிரண்டையும் நிதானமாக சிறிது உயர்த்தவேண்டும்.
அப்படி கால்களைத் தூக்கிய பின்பு கைகளிரண்டையும் உங்கள் தொடைக்குக்கீழ் சற்று அழுத்தமாக அமுக்கி பின்னர் நிதானமாக உங்கள் சிரசை நேரே கொண்டுவந்து நிமிர்த்தவேண்டும்.
உங்கள் கைகளைக் கொண்டு உங்கள் தொடைக்குக் கீழே தாங்கிப் பிடிக்கும்போது உங்கள் முழு உடல்பகுதியும் பார்ப்பதற்கு சிறிய படகைப் போன்ற உருவத்தில் தோன்றும். இடுப்ப்பானது தரையில் அழுந்தியிருப்பதால் பார்ப்பதற்கு அப்படியே படகு போலவே காணப்படும்.
இந்த நிலையில் வளைந்த உங்களது உடல் ஒரு ஊஞ்சல் போல கொஞ்சம் ஆடும். ஆனாலும், நீங்கள் தொடர்சியாக இந்த ஆசனத்தை செய்யும்போது இந்த ஆட்டமெல்லாம் நாளவடைவில் காணாமல் போய்விடும்.
ஆரம்பத்தில், அதிகபட்சமாக ஒரு கால் நிமிஷம் மாத்திரம் நாவாசனம் செய்து பழகலாம். முதலில் இந்த ஆசனம் செய்யும்போது வயிற்றிலே ஒருமாதிரியான வித்தியாசமான அனுபவத்தை உணரமுடியும். பின்னர், நிதானமாக சிரசை கீழிறக்கி பின்னர் கைகள் மற்றும் கால்களிரண்டையும் கீழே இறக்கலாம்.
.Ardha Navasana Benefits
நவாசனம் பயிலுவதால் வயிற்றுப் பகுதி, இடுப்புப் பகுதி, மற்றும் உங்கள் தொடைப் பகுதியும் சேர்ந்தே வலுப்பெறும் வயிறுப் பாகம், இடுப்பைச் சுற்றியுள்ள தேவையே இல்லாத சதை மடிப்புகள் மெதுமாக மறைய ஆரம்பிக்கும். முழுவதுமாக மறைவதற்கு சில வாரங்கள் ஆகலாம். அதுவரை, இந்த ஆசனத்தை தினமும் தொடர்ச்சியாக இடைவிடாமல் செய்துகொண்டே வரவேண்டும்.
Navasana Contraindications
ஏற்கனவே முதுகுவலியினால் அவஸ்தைப் போடுகிறவர்கள் நவாசனத்தைச் செய்யக்கூடாது.
சிறு வயதிலிலிருந்தே உங்கள் பிள்ளைகளுக்கு யோகாசனம் கற்றுக்கொடுத்தால் உடலுக்கும், மனதுக்கும் நன்மை தரும். அனாவசியமான காரியங்களில் ஆர்வம் காட்டாமல் படிப்பில் மாத்திரம் ஆர்வம் காட்டுவார்கள். வாழ்நாள் முழுவதும் தங்கள் உடலையும் மனத்தையும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வார்கள்.
இதனால் அவர்கள் வாழும் கடைசி நாள் வரை அவர்களுக்கு உதவியாக அமையும்.