Best Sellers in Music
வீட்டு மனை எதற்காக வாங்குகிறோம்? நெடுங் காலமாக நம் மனதிலே ஒரு கனவு இல்லம், 24 மணி நேரமும் வலம் வந்துகொண்டே இருக்கிற அந்த வீட்டைக் கட்டுவதற்காகத்தான் நாம் வீட்டு மனை வாங்குகிறோம். சரிதானே?
நாம் எல்லோரும் கை நிறைய பணத்தை வைத்துக்கொண்டா வீடு கட்ட நினைக்கிறோம். குருவி சேர்க்கிற மாதிரி சிறுகச் சிறுகச் சேர்த்து, உற்றார், உறவினர், நண்பர்கள் என்று ஏறக்குறைய யார் யாரிடம் கடனாகப் பணம் பெற்றுக்கொள்ளமுடியுமோ அத்தனை பேரிடமும் கடன் வாங்கி, மேற்கொண்டு நம் வசம் இருக்கும் தங்க நகைகளை அடகு வைத்து அதைக்கொண்டுதான் ஒரு சொந்த வீடு, நமது வாழ்நாளிலே ஒரே ஒரு சொந்த வீடு கட்டுவதற்குத்தான் வீட்டு மனை வாங்குகிறோம்.
அந்த வீட்டு மனை எப்படி இருக்கவேண்டும். என்னென்ன வசதிகளெல்லாம் அந்த நிலத்திலே இருந்தால் நமக்கு நல்லது. என்னென்ன பிரச்னைகளெல்லாம் அந்த வீடு மனையில் இருக்கக்கூடாது என்று இப்போது பார்க்கலாம், வாங்க.
1) முதலாவதாக வீட்டு மனையில் தண்ணீர் வசதி இருக்கவேண்டும். கார்பொரேஷன் அல்லது முனிசிபாலிடி தண்ணீர் குழாய் அந்த ஏரியா வழியாக வருகிறதா என்று பார்க்கவேண்டும். அல்லது குறைந்தபட்சம் கிணறு தோண்டினால் ஒரு பத்து அல்லது பன்னிரண்டு அடி ஆழத்திற்குள்ளாக தண்ணீர் சுரக்கவேண்டும். ஆழ் குழாய் கிணறு எல்லாம் வேண்டாம். அதிக செலவு ஆகும்.
2) வில்லங்கம் ஏதும் இல்லாத நிலமாக இருக்கவேண்டும். அதற்காக வில்லங்கச் சான்று மட்டும் பார்த்தல் போதாது. இந்த விஷயத்தில் நல்ல அனுபவமுள்ள வக்கீலாகப் பார்த்து நிலத்திற்குரிய பத்திரம், கூட்டுப் பட்டா, தனிப்பட்டா, மூலப்பத்திரம், நிலத்தீர்வை ரசீது ஆகிய எல்லா தஸ்தாவேஜுகளையும் அவரிடத்தில் கொடுத்து வில்லங்கம் ஒன்றும் இல்லை என்று உறுதி செய்துகொண்டபின்னர் அந்த நிலத்தை வாங்க முன்பணம் கொடுக்கலாம்.
நிலத்தின் உரிமையாளர் நன்கு அறிந்தவர், தெரிந்தவர் அல்லது உறவினர் என்கிற காரணத்திற்காக கண்ணைப் பொத்திக்கொண்டு வீட்டு மனை வாங்கிவிடக்கூடாது. முன்பணமும் கொடுத்துவிடாதீர்கள்.
3) அந்த வீட்டு மனைக்கு சிரமமில்லாமல் உங்களுக்கு மின்வசதி கிடைக்குமா என்பதை முதலிலேயே நன்றாக உறுதி செய்துகொள்ளுங்கள். உயர் மின் அழுத்தக் கோபுரங்கள் உங்கள் வீட்டு மனையின் ஊடாகப் போகாமல் இருக்கவேண்டும்.
4) மிகவும் முக்கியம், கழிவு நீர்குழாய் வசதி. இந்த வசதி கட்டாயம் வேண்டும். இல்லையென்றால் அப்படி ஒரு நிலத்தில் வீடு கட்டவும் கூடாது. கட்டி குடியிருக்கவும் முடியாது.
5) அந்த நிலம் இருக்கும் இடம் மற்றும் ஊரின் தட்பவெட்ப நிலை எப்படி, மழை பெய்யுமா, அதிகமாகப் பெய்யுமா, குறைவாகபெய்யுமா, அல்லது மழையே பெய்யாதா மற்றும் வெயில் காலத்தில் உஷ்ண நிலை எப்படி இருக்கும். குளிர் காலத்தில் அங்கே குளிர் அதிகமாக இருக்குமா, அப்படி இருந்தால் அந்தக் குளிரை உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா?
Best Sellers in Shoes & Handbags
7} அந்த வீட்டு மனை அருகே சாலை வசதி நன்றாக இருக்கிறதா அல்லது ஒத்தையடிப்பாதையாக இருக்கிறதா? ஏனென்றால் உங்கள் வீட்டுமனைக்கு வெகு அருகில் நல்ல பெரிய சாலை வசதிகள் இருக்கவேண்டும். சாலைகள் பழுதடைந்ததாக இல்லாமால் தற்போது அமைக்கப்பட்ட சாலைகளாக இருத்தல் அவசியம்.
8) நீங்கள் அன்றாடம் அலுவலகத்திற்கோ அல்லது உங்கள் சொந்த வியாபார ஸ்தலத்திற்கோ போய் வரக்கூடிய அதிக தூரமில்லாத இடத்தில் நீங்கள் வாங்கும் வீட்டுமனை இருத்தல் அவசியம்.
9) குறைந்தபட்சமாக ஒரே ஒரு ஏ டீ எம் வசதியானது இருக்கவேண்டும். அல்லது ஒரு வங்கி கிளை இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
10) உங்கள் வீட்டுமனைக்கு மிக அருகிலேயே ஒரு பெட்ரோல் நிலையம் இருந்தே ஆகவேண்டும். இன்னும் அதிகமாகச் சொல்லவேண்டுமானால், ஒரு மருத்துவமனை, ஒரு பள்ளிக்கூடம், ஒரு கல்லூரி, ஒரு அஞ்சல் அலுவலகம், பஸ் நிலையம், ரயில் நிலையம் இவையெல்லாமே மிகவும் தூரத்தில் இருக்கக்கூடாது.
வீட்டுமனையின் விலை குறைவாக இருந்தால் நாம் கடன் வாங்காமல் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டே வீடு கட்டி முடித்துவிடலாம்.
மேற்கூறிய அத்தனை வசதிகளோடும் வீட்டுமனைகளை நமது தமிழ்நாட்டிலே இருபத்தேழு ஊர்களில் கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக நேர்மையான முறையிலே செயல்பட்டு விற்பனை செய்துகொண்டு இருக்கும் ஒரு அருமையான கார்பொரேட் நிறுவனம் குறித்து நீங்களும் அறிந்த கொள்ளவேண்டுமானால் இந்த வீடியோ பாருங்கள்.