மாதுளம்பழத்தை எப்பொழுதெல்லாம் சாப்பிடலாம்.
மாதுளம்பழமானது நிறைய மருத்துவத் தன்மை கொண்ட இயற்கை அன்னையின் அருட்கொடை. மாதுளம்பழம் மாத்திரமல்ல அதனுடைய பூக்கள், மேலும் அதனுடைய மரப்பட்டை யாவுமே மருத்துவத் தன்மை நிறைந்தவையாகும். மாதுளம் பழத்தில் மிகுதியான உயிர்ச்சத்துக்கள் உள்ளன. மாதுளை முத்துக்களின் சுவை எல்லோருக்குமே விருப்பமான ஒன்றாகும். நம்முடைய சரீரத்திற்குத் தேவைப்படுகிற உயிர்ச்சத்துக்கள் மாதுளம்பழத்தில் நிரம்பியிருக்கின்றன. மாதுளம் பழத்தை உண்பதால் ஏற்படும் அநேக நன்மைகளை இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்துகொள்ள மேற்கொண்டு பொறுமையாகப் படிக்கவும்.
மாதுளம் பழத்தை உண்பதால் ஏற்படும் நன்மைகளை சொல்லிமுடியாது, வார்த்தைகளில் அடங்காது. பிற பழங்களில் இருக்கிற உயிர்ச்சத்துக்களை விட மாதுளம்பழத்தில் மிகுதியான உயிர்ச்சத்துக்கள் உள்ளன. மாதுளம்பழத்தில் நமது உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்துக்களோடு கூட நம்முடைய கேசத்திற்கும், மேலும் நமது தோலுக்கும் அவசியமான விஷயங்களும் ரொம்பவே அடங்கியுள்ளன.
மாதுளம் பழத்திலே இரும்புச் சத்து என்று சொல்லப்படுகின்ற அயன் பிரக்டோஸ், கால்சியம், Phosphorus இவைகளோடு தாதுப்புக்களென்னப்படுகின்ற மினெரல்ஸ், மற்றும் ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன. மாதுளம்பழ முத்துக்களை நாம் உண்ணுவதால் நமக்கு நோய் எதுவும் சீக்கிரத்தில் தாக்காமல் பாதுகாக்கிறது. இதனால் நாம் வாழ்நாள் முழுவதும் மருத்துவ உதவி எதுவும் இல்லாமலேயே வாழ வழி செய்கிறது.
இதயத்திற்கு நலம்

கிரீன் டீயிலும் ரெட் ஒயினிழும் எந்த அளவிற்கு antioxidant. polyphenols அடங்கியுள்ளதோ அதனைவிட மேலாக ஒரே குவளையில் ஊற்றிய மாதுளை சாறில் இவையெல்லாம் அடங்கியிருக்கின்றன. மற்றபடி மாதுளம் பழத்திலிருக்கும் நார்ச்சத்தானது நமது சரீரத்தில் மிகுதியாகக் காணப்படுகிற கெட்ட கொழுப்பு யாவையும் அகற்றி நமக்கு இதயம் சம்பத்தப்பட்ட எந்த வியாதியும் வராமல் தடுத்துவிடுகிறது.
எலும்புகளுக்கும் அதிக பெலன்
மாதுளம்பழத்தில் நமக்குத் தேவைப்படுகிற Enzyme கூட நிரம்ப இருக்கிறது. இந்த பயோலொஜிக்கல் கேட்டலிஸ்ட் நம்முடைய எலும்புகளை வலுப்படுத்துகிறது. மாதுளம் பழச்சாறு பருகுவோருக்கு எலும்புகள் சீக்கிரமாகத் தேய்வடைய வாய்ப்பில்லை. எலும்புகளோடும் கூடவே நமது பற்களும் வலுவடைகின்றன. இதனால் எலும்புகள் முறிவதிலிருந்தும் மூட்டுக்கள் வலியிலிருந்தும் நாம் பாதுகாக்கப்படுகிறோம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு விடுதலை:
பொதுவாகவே எல்லா வகைப் பழங்களிலும் க்ளுகோஸ் மற்றும் பிரக்டோஸ் இரண்டுமே இருக்கும். சில பழ வகைகளில் க்ளுகோஸ் அதிகமாக இருக்கும். மா, பலா, வாழை பழங்கள் க்ளுகோஸ் அதிகம் உள்ள கனிகளாகும். ஆனால், மாதுளைப்பழத்தில் பிரக்டோஸ் க்ளுகோஸை விட அதிகமாக இருப்பதால், இதனைச் சாப்பிடுவதாலோ, மாதுளம் பழச்சாறை அருந்துவதாலோ ( சர்க்கரை சேர்க்காமல் ) சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு உயருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. தொடர்ச்சியாக பதினைந்து நாட்களுக்கு மாதுளம் பழச்சாறு அருந்தினால் சர்க்கரை வியாதி நம்மைத் தாக்காமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.
மலச் சிக்கலிலுருந்து விடுதலை:
பித்தம் சம்பந்தமான வியாதிகள் குணடைய மாதுளம் பழம் உதவுகிறது. மாதுளம் பழமானது மலச்சிக்கலிலிருந்தும் விடுதலை தர வல்லது. வறட்டிருமலையும் மாதுளை பழம் சாப்பிடுவதால் குணப்படுத்த முடியும். வயிற்றிலே அல்சர் உள்ளவர்கள் மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சீக்கிரம் குணமாகும். அதோடு, வெளிக்குப் போகும்போது மனிதக்கழிவுடன் இரத்தம் சேர்ந்து வரும்போதும், தொடர்ந்து பேதியாகும்போதும் மாதுளை பிஞ்சை சாப்பிட்டுக் குணம் பெறலாம்.
போதையில் தெளிவு:
மாதுளையில் உயிர்ச்சத்து C அதிகமாகவே இருக்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும்போது, மாதுளம் பழம் சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கச்செய்வது மாத்திரமல்ல, இரத்தத்தை சுத்தப்படுத்தவும் செய்கிறது. ஞாபக மறதி அதிகம் உள்ளவர்கள், மாதுளம் பழம் சாப்பிட்டு நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். வயிற்றில் குழந்தை இருக்கும்போது தலைச்சுற்று, குமட்டல் இவற்றிலிருந்து மாதுளம் பழம் நிவாரணம் கொடுக்கும். மிதமிஞ்சி சாராயம் அருந்திவிட்டு கிறக்கத்தில் இருப்பவர்கள் மாதுளையை சாறு பிழிந்து குடித்தால் தெளிவடைவார்கள்.
பசி எடுப்பதற்கு:
பசியில்லாத காரணத்தினால் சாப்பாட்டை தவிர்ப்பவர்கள் உடல் ஆரோக்கியம் சம்பத்தப்பட்ட பல பிரச்சினைகளை எதிகொள்ள நேரிடும். எனவே நன்றாகப் பசியைத் தூண்டுவதற்கு, குழந்தைகளானாலும் சரி, பெரியவர்களானாலும் சரி மாதுளம் பழச்சாறு அருந்துவதால் பசியின்மையிலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டு நன்றாகச் சாப்பிட முடியும். சிறு பிள்ளைகளுக்கு தினமும் அரை குவளையாவது மாதுளம் பழச்சாறு அருந்தவைதால் பசியின்மை நீங்கி, நன்றாக சாப்பிடுவார்கள்.
அதிக எடையைக் குறைக்க உதவுகிறது:
மாதுளம் பழம் நமது சரீரத்திற்கு முழு பெலன் கொடுக்கிறது. மேலும் அசுத்த இரத்தத்தை சுத்தப்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீர் படுத்துகிறது. எனவே, ஒவ்வொரு நாளும் மாதுளம் பழச்சாறினை அருந்துவதால் நமது உடம்பில் இருக்கிற டாக்ஸின்ஸ், கெட்ட கொழுப்புகள் எல்லாம் வெளியேற்றப்படுகின்றன. இதன் விளைவாக, நமது உடலின் அதிகப்படியான எடை குறைந்துவிடுகிறது.
புற்று நோய் தடுக்கப்படுகிறது:
சூரியனுடைய அதிகமான வெப்பத்தினால், புற ஊதா கதிர்கள் நமது மேல் தோலைக் கருமையடையச் செய்கிறது. மாதுளம் பழம் சாப்பிடுவதால் நமது உடலில் immunity என்று சொல்லப்படுகிற எதிர்ப்பு சக்தி அதிகரித்து நமது தோல் கறுப்பாவதைத் தடுக்கிறது. கான்சர் நோய் வகைகள் எதுவும் நம்மைத் தாக்காமல் பாதுகாக்குகிறது.