வைட்டமின் சி நிறைந்த உணவு வகைகள்

Vitamin C Rich Fruits and Vegetables in Tamil – Vitamin C Rich Foods in Tamil – வைட்டமின் சி உணவுகள்
Spread the love

வைட்டமின் சி என்றாலே நமக்கு ஆரஞ்சுப் பழம்தான் ஞாபகத்திற்கு வரும். அதனை விட வைட்டமின் C அதிகமாயுள்ள சில காய் மற்றும் பழங்கள் பற்றித் தெரிந்துகொள்வோம் வாருங்கள். 

 

நம் தேகம் நலமாக இருப்பதற்கு உயிர்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மிகவும் தேவைப்படுகிறது. இவைகளுள் உயிர்ச்சத்து C மிகவும் அவசியமுள்ள ஒன்றாகக் காணப்படுகிறது.  இது நமக்கு நோய் எதுவும் வரவிடாமல் ஒரு பாதுகாப்பு வலையமாகச் செயலாற்றுகிறது. நம்முடைய தேகத்திற்கு வேண்டிய நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது.

 

 

வைட்டமின் C சி காய்கள் பழங்கள்:

 

நமக்கு மாத்திரமல்ல, குறிப்பாக நமது குழந்தைகளுக்கும் நம் வயதான பெற்றோர்களுக்கும் விட்டமின் C குறைபாடு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய எலும்புகள் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக இருக்கும். அதற்காக நாம் எப்போதும் போதுமான அளவிற்கு விட்டமின் C உயிர்ச்சத்தை பெற்றுக்கொள்வதற்காக இங்கே சொல்லப்பட்டுள்ள காய்கள் மற்றும் பழ வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஆரஞ்சுப் பழங்களைக்காட்டிலும் அதிமான உயிர்ச்சத்து C செறிந்திருக்கிற சில உணவு வகைகள் குறித்துப் இப்போது அறிந்துகொள்ளலாம்.

 

மிளகாய்

 

பாதிக் கிண்ணம் அளவிற்கு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பச்சை மிளகாய்தனில் சுமார் நூற்றி எட்டு மில்லி கிராம் அளவிற்கு விட்டமின் C நிறைந்துள்ளது. ஆய்வாளர்கள் கண்ட ஆராய்ச்சியின் முடிவில் காரமான உணவான பச்சை மிளகாய்தனை அளவோடு உங்கள் சாப்பாட்டில் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் உங்களுக்கு மூட்டு வலி சம்பத்தப்பட்ட பிரச்சினைகள் மேலும் தசைகள் சார்ந்த  வலிகள் இவைகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கிறது.
மேற்கொண்டு பச்சைமிளகாயிலே நார்ச்சத்துக்கள் மிகுதியாக சேர்ந்திருப்பதால் நாம் உண்ட உணவு எளிதில் ஜீரணமாகிறது.

 

 

 

கீரை வகைகள் 

அனைத்துக் கீரை வகைகளிலும் விட்டமின் சி எண்பது மில்லி கிராம் நிறைந்திருக்கிறது. அதிகமாக கீரை வகைகள் எல்லாமே உயிர் சத்துக்களினுடைய உறைவிடம் என்றும்கூட சொல்லலாம். கீரையில்  நமக்குத் தேவையான மதாதுச் சத்துக்களும் கொழுப்பு அமிலங்களும் செறிந்துள்ளன.

 

பிராக்கோலி

 

பிரக்கோலியிலும் விட்டமின் சி மற்றும் நார்ச்சத்துகள் செறிந்து உள்ளன. மற்றும் பிரக்கோலியிலே கான்செர் வியாதியை உண்டுபண்ணும் கிருமிகளை எதிர்த்து செயலாற்றும் சக்தி நிறைந்திருக்கின்றன. நமது அன்றாட உணவின் ஒரு அங்கமாக ப்ரோக்கோலி இருந்தால் அதனால் நமக்கு அதிக உடல் ஆரோக்கியம் பெறலாம்.

பப்பாளிப் பழம்: 

பப்பாளிபழத்தை ஒவ்வொரு நாளும் சாப்பிடலாம். இதனால் நமக்கு சளி மற்றும் சுவாசம் சம்பத்தப்பட்ட பிரச்சினைகள் வராது. உங்கள் தேகம் சுருக்கம் ஏற்படாமல் தேஜஸுடன்  இருக்கும். எலும்புகளிலும் வலிமையுண்டாகும். ஒரு கிலோ எடையுள்ள பப்பாளிப்பழத்தில் 200 மில்லி கிராமுக்கு அதிகமான உயிர்ச்சத்து C உள்ளது.

 

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழத்திழும் உயிர்ச்சத்து C நிறையவே இருக்கிறது. மற்ற ஊட்டச்சத்துக்களும் இந்தப் பழத்தில் சேர்ந்திருப்பதால் நமது இதயத் துடிப்பை சீராக்குகிறது. இதனால் நமது உடல் நலன் மேம்படுகிறது. ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உண்ணுவதால் நமது பற்களில் உள்ள கறைகள் சுத்தப்படுத்தப்படுகின்றன.
காலிஃப்ளவர் ஒரு கிலோ நிறையுள்ள காலிஃப்ளவரில் ஏறக்குறைய 130 மில்லி கிராம் உயிர்ச்சத்து C இருக்கிறது. காலி ஃபிளவரை நமது சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் நார் சத்துக்களும், புரதமும்கூட அதிகமாக இருப்பதால் நமது ஆரோக்கியத்தை இன்னும் மேம்படுத்தும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ் நிறைய நாம் சேர்த்துக்கொண்டால் கான்சர் வியாதி வர வாய்ப்பில்லை. மேலும் முட்டைகோஸில் நார் சத்தும் அதிகமாக உள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. ஒரு முட்டைகோஸில் 100 மில்லி கிராம் உயிர்ச்சத்து C உள்ளது. உங்களுக்கு பிடித்த வகையில் முட்டைக்கோசை சமையல் செய்து சாப்பிட முடிவதால், அன்றாடம் இதனை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
கொய்யா கொய்யா நமக்கு எப்போதும் கிடைக்கக்கூடிய மலிவான அதேசமயம் நமது ஆரோக்கியத்தை பலவகைகளில் மேம்படுத்தும் பழம். கொய்யாவில் உயிர்ச்சத்து C அதிகமாகவே உள்ளது. கொய்யா பழத்தை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உண்ணலாம். மலச்சிக்கல் பிரச்சினையால் அவஸ்தைப்படுகிறவர்களுக்கு கொய்யா பழம் ஒரு அருமருந்து. மேலும் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கும் கொய்யாப்பழம் உண்ணக்கொடுக்கலாம். 

 

கொய்யா

கொய்யா நமக்கு எப்போதும் கிடைக்கக்கூடிய மலிவான அதேசமயம் நமது ஆரோக்கியத்தை பலவகைகளில் மேம்படுத்தும் பழம். கொய்யாவில் உயிர்ச்சத்து C அதிகமாகவே உள்ளது. கொய்யா பழத்தை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உண்ணலாம். மலச்சிக்கல் பிரச்சினையால் அவஸ்தைப்படுகிறவர்களுக்கு கொய்யா பழம் ஒரு அருமருந்து. மேலும் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கும் கொய்யாப்பழம் உண்ணக்கொடுக்கலாம். 

 

விட்டமின் C யின் அத்தியாவசியம் என்ன?

 

வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலனடைகிறது. தசைகள் வலுப்பெறுகின்றன. பற்கள் முளைப்பதற்கு உதவியாகச் செயல்படுகிறது. வைட்டமின் C யம் புரோட்டினும் கலந்து செயல்பட்டு திசு வளர்வதற்குத் துணைபுரிகிறது.
நம்முடைய நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தி எந்த உருவிலும் தொற்று வராமல் தடுத்து ஒரு பாதுகாப்பு வலையமாகச் செயல்புரிகிறது.
நம்முடைய சாப்பாட்டில் கலந்திருக்கும் இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்துக்களை பிரித்தெடுத்து எலும்புகளுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்கிறது.
வைட்டமின்C ஜுரம் மற்றும் சளி சீக்கிரமாக குணமடைய உதவி செய்கிறது.

விட்டமின் C யின் அன்றாட அவசியம்:

 

ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாளொன்றுக்கு எழுபத்தைந்து மில்லி கிராம்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு நூறு மில்லி கிராம்.
சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு  ஐம்பது மில்லி கிராமுக்கு சற்றுக்குறைவாக.
ஆகையால் விட்டமின் C யுடைய தேவையை அறிந்து தினமும் அதனை உண்ண வேண்டும். இவ்வாறு செய்வதால் நாம் வாழ்நாளெல்லாம் ஆரோக்கியமுள்ளவர்களாக மருந்து மாத்திரை மாத்திரைகளின் தேவை ஏதுமில்லாமல் வாழ முடியும்.

 

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

Post A Comment

Your email address will not be published.

Close menu
Close menu