மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி வருவது ஏன்

young-610543_960_720

i Coffee for Diabetes

மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி வருவது ஏன்? | How to reduce menstrual pain naturally?

பருவம் வந்த பெண்கள் அனைவருக்கும் கருமுட்டை உருவாகும் தருணத்தில் மாதம் ஒருமுறை இந்த மாதவிடாய் என்று சொல்லப்படுகிற பீரியட் ஏற்படுவது வழக்கம்.

எனவே மாதவிடாய் ஏற்படும்போதெல்லாம் பெண்களின் வயிற்றுப்பகுதியில் இருக்கிற தசைகள் யாவும் இறுகிப்போகிறது. இதன் காரணமாக மாதவிடாய் நேரத்தில் பெண்கள் எல்லோருக்கும், பொறுக்கமுடியாத அளவிற்கு வயிற்றுவலி, முதுகுப்பக்கம் வலி, இடுப்புப்பகுதியில் வலி, மனதில் உளைச்சல் என்று சொல்லப்படுகிற ஸ்ட்ரெஸ், உடற்சோர்வு அதாவது tiredness உடல்வலி ஆகிய அனைத்து உடல்நலம் சம்பத்தப்பட்ட நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.

i charge natural rejuvenation benefits

இந்தமாதிரியான வலிகள் மற்றும் பிரச்சினைகள் வரும்போது, அந்த வலிகள் மற்றும் பிரச்சனைகளை வெகுவாகக் குறைக்க நம் வீட்டிலேயே நமக்கு நாமே இந்த பாட்டி வைத்தியங்களை செய்துகொள்ளலாம்.

சிறிதளவு வெந்தயம் எடுத்து கொஞ்சம் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால், மாதவிடாய்க் காலத்தில் இறுக்கமடைந்த தசைகள்யாவும் இளக்கம் அடைந்து வலிகள் மற்றும் மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகள் யாவும் குணமாகும்.

கொஞ்சம் தண்ணியைச் சூடாக்கி, அதில் தட்டிவைத்த இஞ்சி சிறிதளவு சேர்த்து, பின் சிறிது நேரம் பொறுத்து அந்தத் தண்ணியில் கொஞ்சம் கறுப்புமிளகு பொடி சேர்த்து இளம் சூட்டில் குடித்தால் மாதவிடாய் வலி குறையும். உடம்பும் சற்றுத் தெம்பாக இருக்கும்.

Viva i Slim Weight Management Support


தண்ணீரை சூடாக்கி அதனை ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி, அந்த பாட்டிலை வயிற்றுப் பகுதியில் உருட்டி உருட்டி ஒத்தடம் கொடுத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நல்லெண்ணெய் குளிர்ச்சி தரக்கூடியது. சிறிதளவு நல்லெண்னனையை சற்று சூடு காண்பித்து அதனை வயிற்றுப்பாகம் முழுவதும் தடவி விட்டால், உடல் சூடு தணிந்து மாதவிடாய் வலி வெகுவாகக் குறையும்.

சாதாரணத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக, ஜீரகத் தண்ணீர் குடித்தால் மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் வலிகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

i Pulse Health Drink Benefits

Post A Comment

Your email address will not be published.

Close menu
Close menu