பெண்களின் உடல் நலம்  மற்றும் மன நலம்

பெண்களின் உடல் நலம்  மற்றும் மன நலம்
பெண்களின் உடல் நலம் மற்றும் மன நலம் சம்பத்தப்பட்ட முக்கிய பிரச்சனைகளைகே குறித்து நாம் கொஞ்சம் அலசி ஆராய்ந்து பாப்போம்.  பெண்களுக்கு முப்பது வயது கடந்துவிட்டால் ஒரு சில ஆரோக்கியம் சம்பத்தப்பட்ட விஷயங்களில் கவனிப்பாக இருக்கவேண்டியது அவசியமாகிறது.

30 வயது கடந்துவுடனேயே காலம் தாழ்த்தாமல் ஒரு பொதுவான ஆண்டு சுகாதார சோதனை அதாவது Health Checkup செய்துகொள்ளவேண்டும். என்பது நல்லதொரு ஆலோசனையாகக் கருதப்படுகிறது. இயக்குநீர் ரீதியாக (harmone) பாலின மேலும் வளர்ச்சிதை (மெட்டபாலிக்) மாற்றம் உண்டாகும். இந்த இரண்டு விஷயங்களிலும் நாம் மிகவும் கண்காணிப்பாக இருத்தல் அவசியம்.  வருடத்தில் ஒரு தடவையாவது மாஸ்டர் Health செக்கப் செய்துகொள்வோமானால், பெரிய வியாதிகள் வருமுன்னே தடுத்து விடலாம்.
செர்விகல் கேன்சரென்பது முன்பெல்லாம் நம் நாட்டுப் பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தக்கூடிய ஒன்றாகக் கருதப்பட்டது. Breast Cancer என்று சொல்லப்படுகிற மார்பு  புற்று நோய் கூட பயப்படவேண்டிய விஷயம்.

இல்லற உறவு கொள்ளும் பெண்களெல்லாரும் உங்கள் வயதை ஒரு பொருட்டாக எண்ணாமல் வ்ருக்ஷத்திற்கு ஒரு தடவையாவது Pap Smear சோதனை மேற்கொள்ளல் அவசியம்.
டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் வைட்டமின் மருந்து மாத்திரைகள் கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும். நமது நாட்டில் இந்தியாவில் ஆங்கிலத்தில் வைட்டமின் என்று அழைக்கப்படும் உயிர்ச்சத்து D குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது.  அதுபோலவே பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்று சொல்லப்படுகிற எலும்பு நுண்துளை வியாதியும் அதிகமாகிக் கொண்டே போகிறது.  இந்தப் பிரச்சினைகளை மேற்கொள்வதற்காக உடனடியாக கால்சியமும்  Folic Acid Tablets எடுப்பது அவசியாமாகிறது. கால்சியம்  சத்தானது  எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதி தரக்கூடியதாகும்.  பெண்களுக்கு பிரசவ சமயத்தில் போலிக் அமிலம் மிகவும் உதவியாக அமைகிறது. 

 

டயட்டில் இருப்பவர்கள் இடையில் நிறுத்தி மறுபடியும் தொடர்ந்தால்  உடல்நலனில் என்ன பாதிப்பு ஏற்படும்?
டயட் முறையைப் பின்பற்றுபவர்கள் அவர்களுடைய அந்தக் குறிப்பிட்ட டயட் உணவினை நன்றாக விரும்பி உண்ணவேண்டும். அப்படிச் செய்வதனால், உங்கள் டயட் உணவை நிறுத்திவிடவேண்டும் என்கிற எண்ணம் உருவாகாது. என்றாவது உங்கள் டயட்டை நிறுத்திவிடவேண்டாம் என்கிற உங்கள் எண்ணத்தை களைந்து விடுங்கள்.
மீண்டும் சொல்கிறேன், எப்போதும் உங்கள் டயட்டை ருசித்து சந்தோசமாகவும், முழு மனதோடும் உண்ணப் பழகுங்கள். ஆங்கிலத்தில் once in a Blue Moon என்று சொல்வார்களே, அந்த மாதிரி என்றாவது ஒரு நாள் பாஸ்ட் food வகைகளை சாப்பிடலாம். ஆனால் அவைகளை அடிக்கடி சாப்பிடவேண்டும் என்று ஏங்கக் கூடாது.. தாய்மையடைந்த பெண்கள் எப்போதும் சுகப்பிரசவம் குறித்தே எண்ணிக் கொண்டிருந்தால் அப்படியே நடக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

ஒரு பெண் தாய்மையடைந்திருக்கும்போது எதைக் குறித்தும் கவலைகொள்ளாமல் எல்லாவற்றிற்கும் உங்கள் மனதை தயார் செய்துகொள்ளவேண்டும். தங்கள் மருத்துவருடைய ஆலோசனையின்படியே பிசகாமல் நடந்துகொண்டு அன்றாடம் நீங்கள் செய்யும் வேலைகளை தொடர்ந்து செய்துகொண்டு வரவேண்டும்.. தாய்மையடைந்திருக்கும் பெண்களுக்குத்தான் குழந்தை பெறும்வரை அந்தக் கஷ்டம் என்னவென்று தெரியும். உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் அந்தக் குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்காக உங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும். இதுவே தங்கள் சரீரத்தின் உச்சக்கட்ட வளர்சிதை மாற்ற நிகழ்வாகும். இந் நேரத்தில், உங்களுக்கு இரத்த சோகை, இரத்த அழுத்தம் மேலும் சுகர் எண்ணப்படும் நீரழிவுத் தாக்கம் எல்லாம் உண்டாக வாய்ப்புகள் அதிகமாம். அனைத்துப் பெண்களுக்கும், அவரவர்களுக்கென்ற தனித்தன்மை இருக்கும். ஆரோக்கித்தைக் கடைபிடிப்பது மட்டும் சுகப்பிரசவத்திற்கு வழிசெய்யாது. மேலும் பிரசவத்தை மட்டும் மனதிலே வைத்து அதையே எப்போதும் சிந்தித்துக் கொண்டு இருப்பதும் சரியல்ல. அனைத்து மருத்துவர்களுமே எப்போதும் சுகப்பிரசவம் ஒன்றைத்தான் எந்த சூழ்நிலையிலும் விரும்புவோம். இயற்கையும்கூட அதைத்தான் விரும்புகிறது.

 

ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படுகிற மனதின்  அழுத்தம் முழுவதும் போக ஏதாவது வழிமுறைகள் உள்ளனவா?

 

 

மன அழுத்தம் என்பது அநேகமாக எல்லோரையும் பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சினையாகவே இந் நாட்களில் தெரிகிறது. நமது மொத்த உடல்நலமும் நமது மனத்தைச் சார்ந்துதான் இருக்கிறது.. நமது அன்றாட வாழ்க்கை முறையில் நாம் எல்லா விஷயங்களிலும் போட்டி போடுவதால்தான் நமது மன அழுத்தம் அதிகமாகிறது.  இதன் காரணாமாக நாம் மேலும் சிறந்த முறையில் செயலாற்ற முடிகிறது. அப்படி பாசிட்டிவ் ஆகவே நாம் செயல் பட்டோமானால் நமது செயல்திறன் மேலும் மேலும் அதிகரிக்கும். அனுதினமும் குறைந்தது ஒரு 40 நிமிடங்களாவது நீங்கள் யோகா பயிற்சியிலும், ஒரு இருபது நிமிடங்கள் தியானத்திலும் ஈடுபட்டீர்களானால் உங்களுக்கு மண் அழுத்தமே ஏற்பட வாய்ப்பில்லை.

உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாக எந்த உணவைத் பிரேக் பாஸ்ட் உண்ணத் தேர்வு செய்யலாமென்றால், பொதுவாக இட்டிலியைத் தேர்வு செய்யவது உச்சிதமாக இருக்கும். நீராவியில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் எதுவுமே நமது உடல் நலனைப் பாதிக்காது.

 

 

 

What is the Difference Between Yoga and Gym

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Close menu
Close menu