நல்லெண்ணெய் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

வியக்க வைக்கும் நல்லெண்ணெய் மருத்துவம் – Health Benefits of Drinking Gingelly Oil in Empty Stomach

வியக்க வைக்கும் நல்லெண்ணெய் மருத்துவம்


ரீபைன்ட் ஆயில் போன்ற மற்ற எண்ணெய்களை விட நல்லெண்ணெதான் சமையலுக்கு நல்லது. நல்லெண்ணையை காலையிலே வயிறு வெறுமையாக இருக்கும்போது ஒரே ஒரு தேநீர் கரண்டி அளவு குடித்தால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நலன் பயக்கும். மேலும் இங்கே நல்லெண்ணெ உபயோகிப்பதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களைக் குறித்துக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். இந்த நல்ல விஷயங்களை அறிந்து கொண்டபின்பு கட்டாயம் உங்கள் சமையலில் எப்போதும் நல்லெண்ணெய் உபயோகித்து நலம் பெறுங்கள்.
 

இயற்கை உபாதை – மலச்சிக்கல்: 

 

காலையிலே வயிறு வெறுமையாக இருக்கும்போது நல்லெண்ணை எடுத்துக்கொண்டால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கலுள்ளவர்கள் சிரமப்படாமல் இயற்கை உபாதையைக் கழிக்கலாம். 
Bad Fat-கெட்ட கொழுப்பு:

 

நல்லெண்ணெய்யில் Lecithin- லெசித்தின் என்கிற வேதிப்பொருள் மற்றும் LinoLeic-லினோலிக் எனப்படும் அமிலம் சேர்ந்திருப்பதால், நமது உடலிலுள்ள இரத்தத்திலே கலந்திருக்கிற மிகுதியான bad fat-கெட்ட  கொழுப்பினை அகற்றி (Low Density Lipoprotein-LDL), நல்ல கொழுப்பினுடைய அளவினை (high-density lipoprotein-HDL) உயர்த்தும்.. 
உடலுக்குக் குளிர்ச்சியூட்டும்:
உடலின் உஷ்ணத்தினால் சிரமப்படுகிறவர்கள், கொஞ்சம் நல்லெண்ணை அருந்தினால், உடலில் சூடு குறைந்து, தேகம்  குளிர்ச்சி கொள்ளும்.
 

 

உயர்-ரத்த-அழுத்தம்:

 

நல்லெண்ணையிலே  antioxidant-ஆன்டி-ஆக்ஸிடன்ட் மேலும்-polyunsaturated fat-பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு இருப்பதால் இவைகள் நமது உடலில் ரத்த அழுத்தம் ஏற்படாமல் காத்துக்கொள்ளும். முக்கியமாக நல்லெண்ணை அருந்துவதால் நீங்கள் ரத்த அழுத்தத்திற்கான  மருந்து மாத்திரைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து பிறகு முற்றிலும் நிறுத்திவிடலாம். 
நல்லெண்ணையிலே Calcium-கால்சியமும் Zinc எனப்படும் துத்தநாகமும் நிறைய உள்ளதால், அனு தினமும் சிறிதளவு நல்லெண்ணைதனை  வயிறு வெறுமையாக இருக்கும்போது அருந்தினால், osteoporosis-ஆஸ்டியோபோரோசிஸ்  எனப்படும்  எலும்புப்புரை நோயயின் பாதிப்பு தணிந்து, எலும்புகளுடைய ஆரோக்கியமானது அதிகரிக்கும். 

 

Joint Pain Relief-மூட்டு வலி நிவாரணி:

மூட்டு வலியினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்னையை அன்றாட உணவிலே சேர்த்துக்கொள்வதனாலும் மேலும் நேரடியாக அருந்துவதினாலும்  குணமடையலாம். 

 

பல் பிரச்சனைகள்:

 

நல்லெண்ணை ஒரு antibacterial food ஆக இருப்பதால், இதனை ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் வாயிலூற்றி சில நிமிடங்கள் கொப்பளித்தால் தீர்வு உண்டாகும்,  இவ்வாறு தொடர்ந்து செய்வதனால், பற்கள் சம்பந்தட்ட வலிகள், ஈறு ஊண் இவைகளில் ஏற்படும் கஷ்டங்கள் எல்லாம் முற்றிலும் அகன்று உங்கள் வாயானது நல்ல ஆரோக்கியமடையும்..

வயிற்றுப்போக்கு குணமாக பாட்டி வைத்தியம்

 

கண் பார்வை நன்றாக தெரிய என்ன செய்ய வேண்டும்

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Close menu
Close menu