கொரோனா வைரஸ் டிப்ஸ் Tamil
கொரோனா Covid 19 வைரஸ் தொற்றுநோய் நம்மைத் தாக்காமல் இருக்கவேண்டுமானால் என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?
கொரோனா Covid 19 உயிரைப் பறிக்கும் வைரஸின் பாதிப்பிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம். பாதிப்பிற்கு முன்னர் பாதித்த பின்னர் எவ்வாறு அதனைக் கையாளலாம்?
.
எந்த வியாதியும் அணுகாமல் சுகமாய் இருக்க விரும்பினால் சுத்தமாக சுகாதாரத்துடன் இருத்தல் முக்கியம். இப்போது கொரோனா Covid 19 நோய் பாதிப்பிலிருந்து நாமெல்லாரும் பாதுகாப்பாக இருத்தல் அவசியம். எல்லா நாடுகளிலும் நிறைய மரணங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது.நம் இந்தியாவிலும் கடந்த 10 மாதங்களாகப் பரவிக்கொண்டே வருகிறது.
Coronavirus essay in tamil
இதனைப் பற்றிய விழிப்புணர்ச்சசி அதிகமாகவே தேவையாகிறது. அரசாங்கமும் , சுகாதாரத்துறை சார்ந்த அனைவரும் கரம்கோர்த்து அநேக விழிப்புணர்ச்சி காரியங்களை ஜனங்களுக்கு கொண்டுசென்று இருக்கிறார்கள்.இவ்வாறான நேரத்தில் இப்படி Covid 19 கிருமி பரவுவதற்கு முன்னாலும் வந்த பின்னரும் எப்படியெல்லாம் தடுப்புக்கான காரியங்களைக் கையாளப்பட்டது என்பதைக் குறித்து இந்தக் கட்டுரையில் தெளிவாக அலசலாம்.
இது உறுதியாக நமது பயத்தை நீக்கும் என்பது மாத்திரமல்ல நம்மை பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே வைத்திருக்க உதவியாக இருக்குமல்லவா?.
அகில உலகையும் பயத்தின் பிடியில் தந்திருக்கிற கொரோனா Covid 19 கிருமி இந்த வைரஸ் முதலில் சீன தேசத்தில் ஆரம்பித்து, உலகெமெங்குமுள்ள அநேக தேசங்களுக்கும் விரைவாகப் பரவிக்கொண்டே இருக்கிறது. சீன தேசத்தில் மில்லியன் கணக்கில் உயிர்களை காவு வாங்கிய பின் இந்தத் தொற்று ஜப்பான் தேசம், தென் கொரிய தேசம், தாய்லாந்து நாடு , தைவான் ஆகிய தேசங்களுக்கும் பரவிக்கொண்டே இருக்கிறது. புதியதொரு மாற்றமும் கொண்டு வேறு சில தேசங்களுக்கும் பரவ வாய்ப்பு இருக்கிறது என்பதாக சீன தேசம் உலகிலுள்ள அணைத்து தேசங்களையும் எச்சரிதிருக்கிறது.
இந்நிலையில், இந்திய தேசத்தில் இந்தக்கிருமியின் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அனைத்து எச்சரிப்புக் காரியங்களும் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது.ஆனாலும் நாமெல்லாரும் இன்னும் அதிக எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டியது அவசியமாகிறது.
ஐக்கிய அரபு தேசங்களிலும் அநேகமாக குளிர்க் காலங்களில் இம்மாதிரியான பயங்கரமான கிருமி நோய்கள் ஒவ்வொரு வருசமும் பரவி வருவது சாதாரணமாகிவிட்டது. இந்த தேசங்களில் வாழ்பவர்கள் தங்கள் வாழ்நாளிலே ஒரு தடவையாவது இந்த மாதிரியான பயங்கரமான கிருமித் தொற்றால் பாதிக்கப்படவே செய்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லப்போனால் சிறுவர்களும் சிறுமிகளும் அதிகமாகவே இலகுவாக இந்த கிருமியினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை.
இருந்தாலும் இப்போது மனிதர்களாகிய நமக்குப் பரவைக்கக்கூடிய இந்தக் கொரோனா வைரஸ் வியாதிக்கு தடுப்பு ஊசிகள் கிடைக்க ஆரம்பித்துள்ளன..
கொரோனா வைரஸ் சோதனை ஆய்வகங்கள்
பலமுறை நம்முடைய இரண்டு கைகளையும் சோப் கொண்டு 15 நொடிகளுக்கு மேல் நன்றாக அழுத்தமாக சுத்தம் பண்ணுங்கள்.
கையிரண்டையும் சுத்தம் செய்யாமல் உங்கள் முகத்திலுள்ள எந்தப்பகுதிகளையும் தொடடவேண்டாம்.
ஏற்கனவே சுகவீனமாக இருப்பவர்களிடம் நெருங்கிப் பழகாமல் சற்றுத் தூரமாக இருப்பதை எப்போதும் கைக்கொள்ளுங்கள்.
அப்படியும் நீங்கள் கிருமியினால் பாதிக்கப்பட்டீர்களானால்
பாதிப்பு பற்றி உணவு ஏற்பட்டவுடன் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருங்கள்.வெளியே போவதை முற்றிலும் தவிர்த்துவிடவேண்டியது கட்டாயமாகிறது.
அடுத்தவர்கள் நமக்குப் பக்கத்தில் நெருக்கமான சூழ்நிலையில் இருப்பதைத் தவிர்த்து விடுங்கள்.
சுற்றி இருக்கிற பொருட்கள் சுற்றுப்புற சூழ்நிலை அனைத்தும் சுத்தமாக பாதுகாப்பது உங்கள் நலனுக்கு அவசியமாகிறது..
தும்மும்போதும் இருமும்போதும் உங்கள் முகத்தை ஒரு கைகுட்டையினால் மூடிக்கொண்டு அவ்வாறு செய்வது உங்களுக்கு மாத்திரமல்ல உங்கள் அருகிலுள்ள அனைவருக்குமே பாதுகாப்பானதாகும்..
கொரோனா வின் வெப்பநிலை
மனித இனத்தையே பாதிக்கும் கொரோனா Covid 19 கிருமி தொற்றுக்கென்று பிரத்தியேகமான மருத்துவத் தீர்வுகள் ஏதுமில்லை. நம்மை நாமே பாதிப்பிலிருந்து காத்துக்கொள்வது ஒன்றே சிறந்த வழியாக தற்போது இருக்கிறது..
வலியிலிருந்து விடுதலை தரக்கூடிய நிவாரன மருந்துகளை மற்றும் ஜுரத்திற்கான மாத்திரைகளை தாராளமாக உபயோக்கிலாம்.
முக்கியமாக குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் மாத்திரைகளைக் கொடுக்கக்கூடாது.
நன்றாக கொதிக்க வைத்த நீரைக்கொண்டு உங்களை போர்த்திக்கொண்டு ஆவி பிடிப்பது நல்லது. ஏர் கண்டிஷன் அறையிலே இருக்கவேண்டாம். காற்றோட்டமான அறையிலே இருப்பதே நீங்கள் சீக்கிரம் குணமடைய உதவும். சுடும் நீரில் ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் குளித்தல் அவசியம்..
மிகவும் சோர்வாக உணர்வீர்களானால், வெளியே போகாமல் வீட்டி்லேயே இருந்து இருந்தபடியே ஓய்ந்திருங்கள் அதிகமாக நீராகாரங்களை மட்டும் உண்ணுங்கள். காய்கறி வகைகளை நிறைய சாப்பிடுங்கள். மாமிச உணவு வகைகளையும், எண்ணையில் பொரித்த உணவுகள் யாவையும் ஒதுக்கிவைப்பது பாராட்டுக்குரிய செயலாகும். சர்க்கரை வியாதி இல்லாதவர்கள் நிறைய பழச்சாறுகளை நாள் முழுவதும் அருந்தலாம். சர்க்கரை வியாதியுள்ளவர்கள், காய்கறி சூப் நிறைய பருகலாம்.