குழந்தைகள் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்

குழந்தைகள் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும் – Home Exercises to Become Taller In No Time – Vino Rayen
Spread the love

முதல் பாகம் – HEALTH – உடல் ஆரோக்கியம்.

 

உயரமாக வளரவேண்டும் என்று எல்லோருமே ஆசைப்படுகிற ஒரு விஷயம். முக்கியமாக, உங்கள் தன் நம்பிக்கைதனை மேம்படுத்தும் செய்கையாகும். உங்கள் வளர்த்தி கூடுதலாக இருந்தபோதும் கிண்டல் பேசுபவர்களை கொட்டித் துரத்திவிட்டு முடியும். வளர்த்தி குறைவாக இருக்கும்போதுதான் கஷ்டம். இங்கே நான் சொல்லுகிற இந்த சுலபமான சிறிய சிறிய உடல் சார்ந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயமாக உங்கள் வளர்த்தி கூடுவதற்கான வாய்ப்பானது அதிகம். 
நல்லது, இனிமேல் நமது வளர்த்தி கூடுவதற்கு உதவிடும் அந்த குறிப்பிட்ட சில அருமையான உடல் சார்ந்த பயிற்சி என்னவென்று ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?
.

SWIMMING:

நீந்துவது ஒரு நல்ல உடற்பயிற்சியாகும். நீங்கள் தொடர்ந்து நீச்சல் பயிலும்போது உங்களது உடலின் அனைத்து பாகங்களும் விரிவடையும். நீச்சல் உங்கள் வளர்ச்சியை நன்றாக அதிகரிக்கப் பண்ணும் நல்லதொரு உடற்பயிற்சியாகும். இருந்தாலும், நீங்கள் ஒவ்வொரு நாளும் நீச்சல் பயிற்சி செய்வது அவசியமானதொன்றாகும். இதுகுறித்து உங்களுக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கும். நீச்சலானது உங்கள் உடலிலுள்ள அனைத்துப் பாகங்களுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சிதரக்கூடியது.STRETCHES
:

தரையில் ஒரு விரிப்பு விரித்து மல்லாந்து படுத்துக்கொள்ளுங்கள். முதலில் உங்களை நீங்களே கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு, உங்களது இடுப்புப் பகுதியை மாத்திரம் லாவகமாகத் தூக்கவேண்டும். ஓரளவுக்கு நன்றாக இடுப்பைத் தூக்கியதும் அதே நிலையில் அப்படியே அரை நிமிடம் மாத்திரம் இருக்கவேண்டும். நிச்சயமாக இப்படி நீங்கள் அனுதினமும் செய்துவந்தீர்களானால் உங்கள் உடலின் வளர்த்தி சிறப்பான முறையிலே மேம்படும்.

.

Skipping:

உங்கள் உடல் வளர்த்தி கூடுவதற்கு இன்னொரு அற்புதமான உடற்பயிற்சி என ஸ்கிப்பிங் கயிறு விளையாட்டைச் சொல்லலாம்.. ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் ஸ்கிப்பிங் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும்போது உங்கள் உடல் வளர்த்தியில் நல்ல மாற்றம் ஏற்படுவதை நீங்களே நன்றாக உணரலாம்.

 

 


YOGA – SHOULDER STAND – SARVANGASANAM:

சிறு வயதிலிருந்தே சர்வாங்காசனம் ஒரு நாளுக்கு குறைந்தது 10 நிமிடங்களாவது பயிற்சிசெய்து வந்தால் உங்கள் உயரம் நன்றாக அதிகரிக்கும். தரையில் ஒரு பாய் விரித்து, மேலும் நீங்கள் விரும்பினால் அதன் மேல் ஒரு ஜமுக்காளம் அல்லது படுக்கை விரிப்பு விரித்து அதிலே மல்லாந்து படுத்துக்கொள்ளவேண்டும். முதலில் உங்கள் கை, கால், தலை மற்றும் இடுப்பு பகுதிகளை தளர்வாக வைத்துக்கொள்ளவேண்டும். விறைப்பாக வைத்துக்கொள்ளக்கூடாது. இந்த நிலையிலேயே உங்கள் கைகளால் இடுப்பின் இரண்டு பக்கங்களையும் பிடித்துக்கொண்டு உங்கள் கால்கள் இரண்டையும் மேலே செங்குத்தாகத் தூக்கவேண்டும். 
இந்த நிலையிலே உங்கள் நாடி உங்கள் நெஞ்சினைத் தொட்டுக்கொண்டு இருத்தல் அவசியம். 
முதலிலேயே, அப்படிச் செய்யவராது. எனவே முதல் நாளிலோ அல்லது முதல் வாரத்திலோ நீங்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.தொடர்ந்து 3 அல்லது நான்கு வாரங்கள் இந்த ஆசனத்தை விடாமல் காலையில் செய்து வந்தால் இந்த யோகநிலை உங்களுக்கு ரொம்ப சரியாக செய்யவரும்.. இந்த யோகாசனத்துடன் சேர்த்து மற்ற பத்மாசனம், புஜங்காசனம், ஹலாசனம் தனுராசனம் போன்ற ஆசனங்களையும் நீங்கள் பயிற்சி செய்து வந்தால், உங்கள் உயரம் நன்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமும் என்றுமே நன்றாக இருக்கும். எப்பொழுதும் இளமையாக இருக்கலாம்.

இரண்டாவது பாகம் –  wealth – பொருளாதார மேம்பாடு:

நீங்கள் நேர்மையான முறையிலே பணக்காரர் ஆக விரும்புகிறீர்களா? உங்கள் கையிலே ரொக்கப் பணம் இல்லையா? கவலையை விடுங்கள். இந்த விடியோவை முதலிலிருந்து கடைசி வரை பொறுமையாக ஒரு இருபது நிமிடங்கள் மட்டும் பாருங்கள். முக்கியமான ஆலோசனைகளை உங்கள் டைரியில் ஒவ்வொன்றாகக் குறிப்பெழுதி வைத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பின்பு இந்த முறைமைகளை சரியாகப் பின்பற்றி உங்கள் முயற்சியைத் தொடருங்கள்.
இல்லத்தரசிகளே, நீங்கள் வேலைக்குப் போய் சம்பாதிக்கவில்லையே என்று ஆதங்கப்படாதீர்கள். நீங்கள்தான் உங்கள் குடும்பத்தை பொருளாதார ரீதியாக பெரிய அளவில் உயர்த்தப்போகிறீர்கள்.
உங்கள் வாழ்க்கைமுறையில் பெரிய அளவில் மாற்றம் வரப் போகிறது. இது சாத்தியமா என்று சந்தேகப் படாமல் உங்கள் முயற்சிகளை நான் சொல்லுகிற ஆலோசனைகளைப் பின்பற்றி வெற்றி பெறுங்கள். சந்தேகப்படாமல் தொடர்ந்து முயற்சி செய்ததால்தான், மனிதன் நிலவில் கால் பதித்தான்.
நீங்களும் உங்கள் வாழ்நாளில் ஊரே போற்றக்கூடிய ஒருபெரிய சாதனையாளர் ஆகலாம். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். மேற்கொண்டு இந்த வழிகளை அறிந்துகொள்ள இந்த விடியோவை முழுவதுமாக இரண்டு முறைகளாவது பாருங்கள்.

இதுகுறித்து உங்களுக்கு சந்தேகங்கள், கேள்விகள் இருக்குமானால் 
என்னைத் தொடர்புகொள்ளுங்கள். என்னுடைய மொபைல் போன் 
நம்பர் +91 6382958461   WhatsApp – +91 9443872027. ஈமெயில் 
vinorayen@gmail.com  

Simple Health Tips for Everyday Living

Home Remedies for Urinary Tract Infection

Post A Comment

Your email address will not be published.

Close menu
Close menu