காலை தவிர்க்க வேண்டிய உணவு

காலை தவிர்க்க வேண்டிய உணவு

நீங்கள் சர்க்கரை நோயுள்ளவராக இருப்பீர்களானால் இங்கே குறிப்பிடப்படுகிற  உணவு வகைகளை காலையில் சாப்பிடுவதை தவிர்க்கவும்….

 

எப்போதுமே சர்க்கரை வியாதிஸ்தகர்கள் பாதுகாப்பான உணவுகளை மட்டும் காலை நேரத்தில் சாப்பிடவேண்டும். ஏனென்றால் காலையில் உண்ணும் உணவுகள் பாதுகாப்பாக இருக்கும்போது மாத்திரமே உங்கள் உடலில் ஓடும் இரத்தத்தினுடைய சர்க்கரை விகிதம் கட்டுக்குள் வைக்கப்படும். ரத்தத்தில் சர்க்கரையின் விகிதத்தை அளவோடு வைக்கவேண்டுமானால் கீழே சொல்லப்பட்டுள்ள தரமற்ற உணவு வகைகளை உண்ணாமல் இருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்குமானால்,நீங்கள் கட்டாயம் சாப்பாட்டு முறையில் அதிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. குறிப்பாக காலையில் நாம் எடுத்துக்கொள்ளும் சிற்றுண்டி என்ன வகையானது, அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதா என்பதை எப்போதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

காலை சாப்பிடாமலேயே இருப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கக்கூடாது, ஏனென்றால் அப்படி காலை உணவைத் தவிர்ப்பவர்கள் மற்ற ஆரோக்கியம் சம்பத்தப்பட்ட மோசமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக வரும் நாட்களில், நீங்கள் மூளை சம்பத்தப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது ஆதாரப்பூர்வமான உண்மை;


சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி ஒருவருக்கு வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் அது நம்மை விட்டுப்போகாது. சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைத்திருக்க மாத்திரம் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் உதவும். இந்த மருந்துகளால் உங்கள் சர்க்கரை வியாதியை முழுவதுமாக குணப்படுத்தவே முடியாது என்பதுதான், யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

தற்போதைய நிலவரப்படி, ஏறத்தாழ 463 மில்லியன் மக்கள் சர்க்கரை வயதியுள்ளவர்களாக உலகெங்கும் இருக்கிறார்கள். 2030ம் வருடம் இந்த எண்ணிக்கை 500 மில்லியனை தாண்டிவிடும் என்றும், 2045 இல் 700 மில்லியனை தாண்டிவிடும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது..

சர்க்கரை வ்யாதியைக் கட்டுக்குள் வைத்திருந்தால் மட்டுமே நாமெல்லாம் நிம்மதியாக வாழ்க்கையைக் கொண்டுசெல்லமுடியும். சர்க்கரை வியாதியஸ்தர்கள் காலை நேரம் சாப்பிடுவதைத் தவிர்க்கும் பட்சத்தில் உங்கள் உடலில் ஓடுகிற இரத்தத்தில் சர்க்கரையின் அள்வு அதிக ஏற்ற தாழ்வுகள் அடைந்து பல பிரச்சினைகளுக்கு வழி வகுத்துவிடும்.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது கட்டாயமான ஒரு விஷயமாகும்.அதனை நீங்கள் சரியான முறையில் கட்டுப்படுத்த தவறினால், இரூதயம் சம்பத்தப்பட்ட வியாதிகள், சிறுநீரகக் கோளாறு,மேலும் பல இன்னல்கள் உங்கள் உடலில் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.

இந்த மாதிரியான எந்தவொரு சிரமங்களும் தங்களுக்கு நேரிடவேண்டாமென்று தாங்கள் ஆசைப்பட்டால், கீழே தரப்பட்டுள்ள நல்லாலோசனைகளைக் கடைபிடித்து என்றும் ஆரோக்கியமாகவும், சந்தோசமாகவும் உயிர் வாழத் தெரிந்துகொள்ளுங்கள்.


சர்க்கரை அளவு அதிகமாக உள்ள தானிய வகைகள்:

உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்குமானால் கடையில் உணவுப்பொருட்களை வாங்கும்போதே அந்த பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள தகவல்களை ஒரு முறையாவது சரியாக வாசித்த பின், உங்களுக்கு திருப்தியாக இருக்கும்பட்சத்தில் மாத்திரம் பணத்தை கவுண்டரில் செலுத்துங்கள். நீங்கள் வாங்கும் உணவுப்பொட்டலத்தில் அச்சிடப்பட்டுள்ள தகவல்களின்படி அதிலே சர்க்கரையின் அள்வு அதிகமாக இருந்தால், அந்த உணவு பொட்டலத்தை வாங்கவேண்டாம்.

சர்க்கரை வியாதியுள்ளவர்கள் புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சாப்பிடவேண்டும். ஆகையால் நீங்கள் காலை உணவாக ஓட்ஸ் அதோடு சிறிது கொட்டை வகை உணவுகளைக் கலந்து உண்ணுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

கனிச் சாறு வகைகள்:

நம்மில் அநேகர் எப்போதும் கனிச்சாறு வகைகளை மிகவும் விரும்பி அருந்துகிறோம்.. கடைகளில் விற்கப்படும் பழச்சாறுகளுடன் சுவையூட்டுவதற்காக சர்க்கரையும் கலந்து கொடுக்கப்படுகிறது.எனவே பழச்சாறுகளை கடைகளில் வாங்கிகுடிப்பதைத் தவிர்த்துவிடுவது சிறந்தது. அதற்குப்பதிலாக, வீட்டிலேயே பழங்களை நறுக்கிச் சாப்பிடலாம். நார்ச்சத்து மிகுந்த உண்வு வகைகளோடு பழங்களைச் சாப்பிடுவது உடல் நலனுக்கு மிகவும் நன்மை பயக்கும்

 

கடைகளில் விற்கப்படும் லஸ்ஸி:

யோகர்ட் என்று சொல்லப்படுகிற தயிரிலிருந்து தயாரிக்கப்படும் பானத்தில் சுவையூட்டிகள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. தயிர் உடலுக்கு நல்லதுதான். ஆனாலும், இந்த லஸ்ஸி என்கிற பானத்தை நம் வீட்டிலேயே செய்து சுவையூட்டிகள் ஏதும் சேர்க்காமல், சிறிது உப்பு மட்டும் சேர்த்து அருந்தினால், சர்க்கரை வியாதியஸ்தர்கள் பயப்படாமல் அருந்தலாம். இப்படிச்செய்வதால், நமக்கு ஏற்படவிருக்கும் பக்கவிளைவுகளை முற்றிலும் தவிர்த்துவிடலாம்.

PANCAKE என்று சொல்லப்படுகிற பணியாரம்:

 

பணியார வகைகள் எல்லாமே மிகவும் சுவையானதாகவும், எல்லோராலும் விரும்பி உண்ணப்படுகிற உணவு வகையாகவும் இருக்கிறது. இது மாவு, பால் மற்றும் முட்டைகளைக் குழைத்துப் பொரித்து வட்ட வடிவில் தயாரிக்கப்படும் மிக மெலிதான கேக் வகை. சர்க்கரை வியாதியஸ்தர்கள் எந்த பணியார வகைகளையும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது. மற்ற நேர உணவுகளில், இந்த பான் கேக் வகைகளில் ஏதாவது ஒன்றை மிகவும் சிறிய அளவில் சுவைத்துப்பார்ப்பதற்காக மட்டும் உண்ணலாம். சாப்பாடு மாதிரி சாப்பிடக்கூடாது. ருசியினால் நீங்கள் ஈர்க்கப்பட்டு கொஞ்சம் அதிகமாக எடுத்துக்கொண்டீர்களானால், அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதனை வார்த்தைகளால் சொல்லவேண்டியதில்லை. இந்த உணவு வகையில், புரதச்சத்தும் இல்லை. நார்ச்சத்தும் அறவே இல்லை.

ஸ்மூத்திஸ்:

ஸ்மூத்திஸ் வகைகள் பழங்கள், பால், தயிர் மற்றும் ஐஸ் கிரீம் எல்லாம் கலந்து மேலும் சுவையூட்டிகளும் சேர்க்கப்பட்டு அருந்துவதற்கு மிகவும் ருசியான பானங்களாகும். சர்க்கரை வியாதியஸ்தர்கள் ஸ்மூத்திஸ் பானங்களை அருந்துவதை முற்றிலும் தவிர்க்கவேண்டியது கட்டாயமாகும். இது நம்முடைய ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. மாற்றாக, நீங்கள் ஆப்பிள் சிறிதவளவு தினமும் சாப்பிடலாம். சப்பாத்தி போன்ற காலை நேர உணவுடன் கொஞ்சம் வெண்ணை சேர்த்து உண்ணலாம். ஒவ்வொரு நாளும், மத்திய உணவில் கீரை வகைகளை ஒரு நாளுக்கு ஒரு கீரை வகை என்று எடுத்துக்கொள்வது உங்கள் உடல் நலனை மேம்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகள் அனுதினம் காலையில் தனுராசனம்  செய்துகொண்டு வருவீர்களானால்   விரைவில் சர்க்கரை நோயிலிருந்து குணமடையலாம். இந்த ஆசனத்துடன், மற்ற ஆசனங்களும் சேர்த்து, பத்மாசனம் அல்லது வீராசனம், புஜங்காசனம், சர்வாங்காசனம் ஆகிய ஆசனங்களையும் தொடர்ச்சியாக பயிற்சி செய்து வந்தால் நல்ல சுகம் கிடைக்கும்.

 

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Close menu
Close menu