கர்ப்பிணிப் பெண்களே நீங்கள் முதலாம் மூன்று மாதங்களில் இங்கே சொல்லப்பட்டிருக்கிற சில சத்தான உணவு வகைகளை கட்டாயம் சாப்பிடுங்கள்.
முதலாம் மூன்று மாதங்களில் நீங்கள் சாப்பிடும் இந்த வகையான சத்தான உணவுகள் வாயிலாக மட்டுமே உங்களையும் உங்கள் கருப்பையில் வளர்ந்துகொண்டிருக்கும் உங்கள் சிஷுவையும் பாதுகாத்துக்கொள்ள இயலும். இப்போது அந்த குறிப்பிட்ட உணவு வகைகள் என்னவென்று தெரிந்துகொள்வோமா?
கருவுற்ற பெண்கள் குழந்தை பெறும்வரை மிகவும் பாதுகாப்பாக நடந்துகொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக ஒன்றாம் மாதம், இரண்டாம் மாதம் மற்றும் மூன்றாம் மாதம் ஆகிய இந்த மூன்று மாதங்களிலும் மிகவும் கவனத்துடன் உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் குறிப்பிட்ட இந்தக் காலகட்டத்தில்தான் அநேகமாக வயிற்றிலுள்ள கரு சிதைவடைகிறது. அதே நேரத்தில், முதல் மூன்று மாதங்களில்தான் உங்கள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை வேகமாக வளர்கிறது. எனவே பிறக்கப்போகிற உங்கள் குழந்தையின் முழு நலனையும் கருத்தில்கொண்டு, உங்கள் உடலை மாத்திரம் அல்ல உங்கள் மனதையும் கூட தைரியமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருத்தல் அவசியமாகிறது.
முதலாவதாக உங்கள் உடல் நலனை பேணிப் பாதுகாப்பதற்கு சத்தான உணவு வகைகள் தேவை. சரியான உணவு வகைகளை நீங்கள் சாப்பிடுவதால் மட்டுமே உங்களையும் உங்கள் வயிற்றில் வளரும் உங்கள் குழந்தையையும் பேணிக் காத்துக்கொள்ள இயலும். அந்த சரியான உண்வு முறைகள் பற்றியும் அந்தக் குறிப்பிட்ட உணவு வகைகள் பற்றியும் இப்போது நாம் தெரிந்துகொள்வோமா?
கீரை வகைகள்
சிறு பிள்ளைகள் முதற்கொண்டு முதிர்ந்த பெரியவர்கள் வரையிலும் கட்டாயம் சாப்பிடவேண்டிய ஒரு உன்னதமான உணவுதான் கீரை வகைகள். கீரையை ஒரு அருமருந்து என்றும் கூறலாம்.
முக்கியமாக தாய்மை அடைந்தவர்களுக்கு கட்டாயம் தரப்படவேண்டிய உணவு கீரையாகும்.
கீரை வகைகள் அனைத்திலுமே உயிர்ச்சத்து B மேலும் Folic Acid நிறைவாக உள்ளது. கர்ப்பிணிப் பெண் யாராக இருந்தாலும் முதலில் கொடுக்கப்படவேண்டிய உணவு கீரை வகைகள் மட்டுமே. கீரை வகைகளில் நிறைந்திருக்கிற போலிக் ஆசிட் கருவில் வளருகின்ற குழந்தையுடைய மூளைக்கும் முதுகெலும்பிற்கும் தொடர்புடைய நரம்பு நாளங்களில் குறைபாடுகள் எதுவுமில்லாமல் பிறக்க உதவுகிறது.
ஒவ்வொரு நாளும் உங்கள் சாப்பாட்டில் அவசியம் ஒரு கீரை வகையாவது இடம்பெறவேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் கொடுத்தாலே போதும். மிகவும் அதிகமாக கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. கீரை வகைகளை சூப்பு போட்டும் குடிக்கலாம். சூப்பில் சிறிதளவு மிளகு சேர்த்துக்கொண்டால் ருசியும் கூடும். குமட்டலும் வராது.
சிட்ரஸ் பழங்கள்
கர்ப்பிணி பெண்களுக்கு முக்கியமாக சாப்பிடவேண்டிய உணவு வகைகளில் ஒன்றுதான் சிட்ரஸ் பழங்கள். சிட்ரஸ் பழங்களை முகர்ந்து பார்த்தாலே வாந்தி வராமல் கட்டுப்படும். தினமும் குறைந்தது ஒரு ஆரஞ்சு அல்லது சாத்துக்குடி அல்லது குறைந்தபட்சம் ஒரு எலுமிச்சைப் பழம் பிழிந்து தண்ணீர் கலந்து சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் உயிர்ச்சத்து C தேவையான அளவு உடலுக்கு கிடைக்கும். இதனைப் பழமாகவும் சாப்பிடலாம் அல்லது சாறு பிழிந்து அருந்தலாம்.. சிட்ரஸ் பழங்களில் உயிர்ச்சத்து C அதிகமாக இருந்தபோதிலும் இவ்வகைப் பழங்களில் நார்ச்சத்துக்கள் குறைவாகவே உள்ளது. எப்போதுமே உயிர்ச்சத்து சி நமது உடலை நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கும் திறன் கொண்டது.
கொட்டைகள்
Nuts என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கொட்டை உணவுகள் ஒன்பது மாதங்களுக்கும் கர்பிணிப்பெண்களுக்கு கொடுக்கப்படவேண்டும். இதனால் கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும் கொட்டை உணவுகளில் ப்ரோட்டீன் செறிந்திருப்பதால் தாய்மையடைந்தவர்கள் அனுதினமும் கொட்டை வகைகளை உணவில் தினமும் எடுத்துக்கொள்ளவேண்டும். கொட்டை வகை உணவுகளில் நார்ச்சத்தும், நல்ல கொழுப்பும்,ப்ரோடீனும் செறிந்திருப்பதால் தாய்க்கும் சேய்க்கும் பல வகைகளில் நலன் தருகிறது. குறிப்பாக அல்ர்ஜி எதுவும் குழந்தையை தாக்காதவாறு இவை தடுக்கின்றன.
.
CURD-தயிர்:
கர்ப்பிணிப் பெண்கள் மோரோ அல்லது தயிரோ உணவில் சேர்த்துக்கொண்டால் சளி பிடிக்கும், ஜலதோஷம் உண்டாகும் என்கிற தவறான ஒரு கருத்து இன்றும் நம்மிடையே நிலவி வருகிறது. தயிரில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் தாய்மையடைந்தவர்களுக்கு கால்சியம் குறைவு ஏற்பட வாய்ப்பில்லை. கருவினில் வளரும் குழந்தைக்கு கால்சியம் சத்து மிக்க அவசியமானதால் கர்பிணிப்பெண்கள் ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய கோப்பை அளவு தயிரை உணவுடன் சேர்த்து உண்ணவேண்டும். தினம் ஒரு கப் தயிர் சேர்ப்பதன் மூலம் கருவின் எலும்புகள் வலுவாக உதவும். அப்போதுதான் கருவில் வளரும் குழந்தைக்கு calcium deficiency ஏற்பட வாய்ப்பில்லாமல் போகும். குழந்தையின் எலும்புகளும் உறுதியடையும் என்பதும் உண்மை.
பீன்ஸ் வகைகள்
கர்ப்பிணிப் பெண்களுக்கு சகஜமாக மலச்சிக்கல் ஏற்படுகிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. எனவே அவர்கள் தாய்மையடைந்த முதல் மாதத்திலிருந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் நாள் வரையிலும் நார்ச்சத்துக்கள் செறிந்த உணவுகளை நிறைய சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலை முற்றிலுமாகத் தவிர்க்க முடியும். பீன்ஸ் வகைக் காய்களை நன்றாகச் சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்குத் தேவைப்படும் புரோட்டீன் மற்றும் பைபர் நன்றாகக் கிடைப்பதால் மலச்சிக்கலே ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. Beans காய்கள் குடலியக்கத்தை நேர்த்தியாக செயல்படச் செய்கிறது. அதே சமயம் இந்தப் பிரச்சனையை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டால் கர்பிணிப்பெண்களுக்கு மூல வியாதி தாக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, கருப்பையில் வளரும் உங்கள் குழந்தையின் உடல்நலன் மற்றும் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் தங்கள் சாப்பாட்டில் பீன்ஸ் வகைகாய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
கோழி முட்டை
தாய்மை அடைந்தவர்கள் கட்டாயம் நாள் ஒன்றுக்கு ஒரு கோழி முட்டையாவது சாப்பாட்டுடன் எடுத்துக்கொள்ளவேண்டும். அவித்த முட்டையாக இருந்தால் இன்னும் நல்லது. கோழி முட்டையிலிருந்து கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான ப்ரோட்டீன் சக்தி நிறைவாகக் கிடைக்கிறது. மேலும், கோழி முட்டையில் உயிர்ச்சத்து D யுடன் கால்சியம் இருக்கிறது. எனவே கருவில் வளரும் உங்கள் குழந்தையுடைய எழும்புகளெல்லாம் உறுதிப்படும். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் அனைத்து உணவு வகைகளும் கலோரிகள் செரிவுள்ளதாக உண்ணவேண்டியது தாய் சேய் இருவருக்குமே நன்மை பயக்கும். குறிப்பிட்ட சத்தான உணவு வகைகளை அதிகமாகவே உண்ணுவது உடல் நலனுக்கு மென்மேலும் நலனும் பலனும் தாராளாமாய் கொடுக்கும்.