நமது கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்கச்செய்யும் பச்சைக் காய்கறி வகைகள்:
காட்டு ரோஜா தேனீர் – Wild Rose Tea
நமது கண்களின் செயல்பாட்டிற்கு உதவிடும் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், முக்கியமாக வைட்டமின் C மற்றும் அயன் சத்துக்கள், இவை யாவும் வைல்ட் ரோஸ் தேநீரில் அடங்கியுள்ளது. மேலும் வைல்ட் ரோஸ் டீ காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறலுக்கும் நல்லது. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் வைல்ட் ரோஸ் தேநீர் பருகலாம்.
கொத்து மல்லித் தழை
பச்சையான கொத்தமல்லி தழைகளையும், உலரவைத்த கொத்தமல்லி விதைகளையும், கொத்தமல்லி விதைப் பொடியையும் நாம் உணவில் அதிகமாக பயன்படுத்துகிறோம். கொத்தமல்லி ரசம் நமது அன்றாட உணவில் கலந்த ஓன்றாகும். பச்சைக் கொத்தமல்லி தழை என்று சொல்லப்படுகிற கொத்தமல்லி இலைகளை நாம் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது நமது பார்வைத் திறன் மேம்படும். வைட்டமின்கள் இதில் அதிகமாக உள்ளன..
Carrot – கேரட் நன்மைகள்:
கேரட்டினை சமைத்துச் சாப்பிடுவதை பச்சையாக சாப்பிட்டால் நமது கண்களுக்கு மிகவும் நலம் பயக்கும். கேரட் ஜூஸ் செய்து பருகலாம். பச்சைக் கேரட்டிலே சாலட் தயாரித்து உணவுடன் சேர்த்துக் கொண்டும் சுவைக்கலாம். கண்களுக்கு தேவையான வைட்டமின்கள் கேரட்டில் நிறைய இருக்கின்றன..
ப்ரோக்கோலி ரெசிப்பீஸ்
நமது கண்களின் பார்வைத் திறனை அதிகரிக்க செய்யும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த ப்ரோக்கோலி காயை வித விதமான வகைகளில் சமைத்து, ரசித்து ருசித்து சாப்பிடலாம். வாரத்திற்கு ஒரு முறையாவது ப்ரோக்கோலியை உணவில் நாம் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
மீன்கள்
கடல் மீனாலும் சரி, ஆற்று மீனாலும் சரி, எல்லா வகையான மீன்களும் புரத்தைச் சத்து அதிகம். கெட்ட கொழுப்பு குறைவு. சாலை மீன் என்று சொல்லப்படுகிற saldin fish, வஞ்சிரம் என்றும் ஷீலா மீன் என்றும் சொல்லப்படுகிற இந்தக் கடல் மீன் விலை அதிகமானாலும், நமது கண்களுக்கு மிகவும் நல்லது. தொடர்ந்து மீன் சாப்பிடுபவர்களுக்கு பார்வையில் பிரச்னை வர வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.
அவகாடோ புரூட் :
மேலும் அவகாடோ என்று அழைக்கப்படுகிற பட்டர் புரூட் சாப்பிடுவதும் நமது கண்களுடைய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதிலும் நிறைய வைட்டமின்கள் மற்றும் கரோட்டின் இருப்பதால் இது மிகவும் விரும்பி உண்ணப்படுகிறது. .
பெர்ரி புரூட் வகைகள்:
பெர்ரி வகைப் பழங்கள் யாவும் சுவையாகவும், நோய் எதிர்ப்புத் திறம் அதிகம் கொண்டதாகவும் இருப்பதால் இந்த வகைப் பழங்களை நாம் அடிக்கடி சாப்பிட்டால் நமது கண்களுக்கும் நல்லது. நமது உடலின் இரத்த ஓட்டம் சீரடையவும் பண்ணுகிறது.
கண்களைக் கழுவும் முறை:
காலை எழுந்தபின் உங்கள் கண்களை குளிர்ந்த நீரினால் கழுவி சுத்தமாக்குங்கள். கண்கள் திறந்த நிலையில், பல முறை உங்கள் உள்ளங் கைகளில் தண்ணீர் அள்ளித் தெளித்து சுத்தம் செய்யவேண்டும். கண்களைக் கழுவும் குப்பி கண்ணாடிக் கடைகளில் விற்கப்படுகிறது. அதிலே தண்ணீர் ஊற்றி சில துளி பன்னீர் சேர்த்து, ஒரு கண்ணை ஒரு தடவை என்றவாறு இரண்டு கண்களையும் தனித் தனியாக முறைப்படி அலசவேண்டும்.
இந்த முறையைப் பின்பற்றி நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது கண்களை சுத்தம் செய்வதால் தொற்று நோய் எதுவும் உங்கள் கண்களை பாதிக்காது. உங்கள் கண்களுக்கு இந்த பயிற்சி மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்..
உங்கள் கண்களிரண்டுக்கும் சிறிது ஓய்வு தாருங்கள்:
தொடர்ந்து வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் இடையே ஒரிரு நிமிடங்களாவது கொஞ்சம் கண்ணைப்பொத்தி ஓய்வு கொள்ளவேண்டும். உங்கள் கைகள் இரண்டையும் நன்றாக உரசி அந்தச்சூட்டுடன் உங்கள் கண்களின் மேல் வைத்து இதமாக அழுத்தவேண்டும் காலை, மதியம், மாலை மற்றும் இரவிலும் நல்ல தண்ணீரினால் உங்கள் கண்களிரண்டையும் அலசும்போது உங்கள் கண்களுக்கு நல்ல இதமாக இருக்கும். இந்தப் பழக்கத்தை தினம்தோறும் கைக்கொள்ளுங்கள்.
குழந்தைகள் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்