ஆண்மை தன்மையை அதிகரிக்க எளிமையான வழிகள்

ஆண்மை தன்மையை அதிகரிக்க எளிமையான வழிகள்
Spread the love

ஆண்மை அதிகரிக்க மூலிகை

குறிப்பாக ஆண்களுடைய மலட்டு நிலைமை அகற்றி தாது அதிகரிக்கப்பண்ணும் மூலிகை வகைகள் ஒரு சிலவற்றை நாம் தெரிந்துகொள்வோமா?

கல்யாணமாகியும் குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தை ஏதும் பிறக்கவில்லை என்றால் முன்பெல்லாம் பெண்களை மட்டும்தான் குறை கூறுவார்கள். ஆனால் தற்போது இருக்கும் நிலைமைதனை ஆராய்ந்தால், ஆண்களிடம்தான் குழந்தையின்மைக்கு காரணம் சொல்லவேண்டியிருக்கிறது.

 

கற்பு பெண்களுக்கு மட்டும்தான் அவசியம், ஆண்களுக்கு அது முக்கியமில்லை என்கிற தவறான ஒரு கருத்தை நமக்குள்ளே திணித்துவிட்டார்கள். எனவே தற்கால இளைஞர்கள் தங்கள் மனம்போனபடி வாழ்ந்து, தங்கள் இளம் வயதில் எப்படியெல்லாம் வாழக்க்கூடடதோ அப்படியெல்லாம் மனம்போன போக்கில் வாழ்ந்து முடிந்தபின்பு திருமண பந்தத்திற்குள் நுழைகிறார்கள்.

 

அப்பொழுதுதான், இந்தப் பிரச்சினை விஸ்வ ரூபம் எடுக்க ஆரம்பிக்கிறது. ஆண்மை குறைவை நிவர்த்தி செய்யக்கூடிய மூலிகை மருந்துகள் நம்மிடம் நிறையவே இருக்கின்றன. இவைகளை பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்கள் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அவர்கள் மலட்டுத்தன்மை நீங்கும். விறைப்பு மேம்படும். PREMATURE EJACULATION ISSUES அறவே நீங்கிப்போகும். நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும்.

 

ஆண்மை அதிகரிக்க மருந்து

 

கானாம் வாழையிலையுடன் முருங்கை விதை மற்றும் முருங்கைப்பூ 

கானாம் வாழையிலை கொஞ்சம் எடுத்து முருங்கைப்பூ இளம்மொக்குகளை அதே அளவு சேர்த்து ஒரு கிளாஸ் அளவு தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி நன்றாக வேகும்படி செய்து தண்ணீர் சுண்டிப்போகும்படி காய்ச்சி பின்பு அதிலிருந்து சாறு பிழிந்தால் பாதி கிளாஸ் அளவுக்கும் குறைவாகவே கிடைக்கும்.

இதனை நன்றாகக் காய்ச்சி இறக்கிய பசுவின் பாலில் சிறிதளவு நாட்டுச்சர்க்கரைதனை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் வேளையில் தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பது நாட்களுக்குக் குறையாமல் அருந்தி வந்தால் தாது பலப்படும். அதன்பின்னும், சாதாரணமாக 10 நாட்களுக்கு ஓரிரு முறை தொடர்ந்து இதனை இந்த முறைப்படியே அருந்தி வரலாம்.

 

ஜாதிக்காய் மற்றும் மூலிகை பொடிக்கலவை

 

ஜாதிக்காயுடன் அதே அளவில் நன்றாய் காய்ந்த சுக்கு, துளசிச் செடி விதைகள், ஈரப்பத்தமில்லாத கடுக்காய் ஆகியவற்றை ஒன்றாக சிறிய  உரல் ஒன்றில் போட்டு நன்கு தூளாகும் வரையில் பொடி செய்து நன்றாக விரவி பின்னர் சளித்துமுடித்து ஒரு சுத்தமான காய்ந்த டப்பாவில் கொட்டி காற்றுப்போகாதவண்ணம் மூடி போட்டு ஈரப்பத்தமில்லாத இடத்தில, குறிப்பாக சமயலறையில் வைத்து விடுங்கள்.

.

ஒவ்வொரு நாளும் காலையிலும் சாயங்காலத்தில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நன்றாகக் காய்ச்சி இறக்கிய  பசுவின் பாலுடன் சேர்த்துக் கலக்கி ஒரு மண்டலம் அருந்தி வருவீர்களானால் மலட்டுத் தன்மை நீங்கி ஆண்பலம் மிகுதியாகும். உங்கள் ஸ்பெர்ம் கவுண்ட் நன்றாக உயரும்.. திருமணமான ஆண்களுக்கு இரவில் இந்த முறையில் பால் அருந்தச் செய்யலாம்.

துளசிச் செடியின்  வேர்ப்பாகம் 

 

ஆண்மை அதிகரிக்க சித்த மருத்துவம்

 

துளசிச் செடியின்  விதைகள் போன்றே அதன் வேரும்கூட நன்மைகள் தரவல்லது. துளசிச் செடிதனை வேருடன் பிடுங்கி மண் மற்றும் தூசி எல்லாம் போகும்படியாகக் கழுவி பின்னர் சிறிய துண்டுகளாய் வெட்டி நறுக்கி வெயில் நேரத்தில் காயும்படி செய்யவேண்டும். ஈரமே இல்லாதவாறு காய்ந்தபின்பு நான்றாகப் பொடியாக்கி சல்லடையினால் தூசி நீக்கி ஒரு காய்ந்த மூடிபோட்ட பாத்திரத்தில் இடவும்.

இந்தப் பொடியை இரண்டு வெற்றிலையில் அரைத் தேக்கரண்டி அளவு வாயில் போட்டு நன்றாக சவைத்து சாறுடன் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வந்தால் ஒரே வாரத்தில் விந்தானது கெட்டிப்படும். நரம்பு மண்டலங்களும் பலமடையும்.

 

 

பூனைக்காலி விதைக் கலவைப் பொடி

ஆண்களின் பலம் பெருக்கும் மூலிகை இனங்களில் பூனைக்காலி விதைக்கென்று சிறப்பான இடம் தரப்பட்டுள்ளது. பூனைக்காலியின் காய்களில் இருக்கும் விதைகளை சேகரித்து அதோடு நிலப்பனங்கிழங்கு, இலவம் பிசின், நெருஞ்சில் விதை, நீர்முள்ளி விதை, தண்ணீர் விட்டான் கிழங்கு, நெல்லி இவை எல்லாவற்றையும் சரியான அளவில் ஒரே அளவாக எடுத்து காயவைத்து பொடிபண்ணி பின்னர் சல்லடை மூலம் தூசிகள் அகற்றி சுத்தமான, காய்ந்த டப்பாக்களில் போட்டு காற்றுபுகாமல் மூடி வைக்கவேண்டும்.

அனுதினம் காலையிலும் மாலையிலும் ஒரு தேக்கரண்டியில் எடுத்தபின் கொஞ்சம் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மைசக்தி உயர்ந்து விந்தும் கெட்டிப்படும். இந்த மூலிகை பொருட்கள் அனைத்தும் உங்கள் ஊர் நாட்டு மருந்துகள் விற்கும் கடைகள் அனைத்திலும் வாங்கலாம்.

 

அமுக்ரான் கெழங்கு

அமுக்ரான் கிழங்கு சிறிது கசப்பாக இருக்கும். இதனை பசுமையாக வாங்கியுபயோகிக்கலாம். அல்லது மருந்துக்கடைகளில் பொடி செய்து விற்பனை செய்வதையும் உபயோகிக்கலாம். இதற்கு நேச்சுரல் வயக்ரா என்ற ஒரு பெயரும் உண்டு. அமுக்ராங்கெழங்குப் பொடியுடன் தேனைச் சேர்த்து உட்கொண்டால் ஆண்மை அதிகப் பெலன் கொள்ளும். இல்லற இன்பத்தில் ஒரு குறைவும் வராதவாறு ஹார்மோன்களை நன்றாக சுரக்கும்படிசெய்து ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

 

ஓர் இதழ் தாமரை அருமருந்து:

 

ஆண்மை அதிகரிக்க வழி,

 

 

ஓரிதழ் தாமரை இலைகலிரண்டு பறித்து நன்றாகக் கழுவி காலையில் சாப்பாட்டுக்கு 2 மணி நேரங்களுக்கு முன்பே சவைத்து உண்டு காய்ச்சின பசுவின் பாலுடன் சேர்த்து அருந்திவரலாம்.இவ்வாறு தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் அருந்தி வரவேண்டும். மறுபடியும் 30 நாட்கள் இடைவெளிக்குப்பின் அடுத்து மூன்று வாரங்கள் அருந்தி வந்தால் விந்தணுக்கள் விகிதம் அல்லது எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

மேற்கூறிய மூலிகை வகைகள் யாவுமே தாது விருத்தியாவதற்கு பயன் தரக்கூடியது.எந்தவிதமான பெரிய பாதிப்புகளோ பக்கவிளைவுகளோ ஏற்படுத்தாது. வழக்கமாக நாம் பசும்பால் அருந்தும்போது இந்த மூலிகைப்பொடிகளை சேர்த்து அருந்தலாம்.சித்த மருத்துவருடைய அறிவுறுத்தலோடு இந்த மூலிகைகளை உபயோகிப்பது மிகவும் சிறந்ததாக அமையும்.

Post A Comment

Your email address will not be published.

Close menu
Close menu